பதிவு செய்த நாள்
12 மே2020
23:17

புதுடில்லி:புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, வரிச் சலுகைகள் வழங்கும் வகையில், அவற்றுக்கு, 10 ஆண்டுகளுக்கு, ’வரியில்லா காலம்’ வழங்குவது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பாதிப்பால் சரிவடைந்திருக்கும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, ’டேக்ஸ் ஹாலிடே’ எனும், வரியில்லா கால சலுகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:நிறுவனங்கள், 200 மில்லியன் டாலருக்கு மேல், அதாவது, 3,775 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், வரியில்லா காலம், 10 ஆண்டுகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை, மத்திய நிதியமைச்சகம் மதிப்பீடு செய்யும்.மருத்துவ சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், தொலைதொடர்பு சாதனங்கள், மூலதன பொருட்கள் ஆகிய துறைகளில், ஜூன் 1ம் தேதியிலிருந்து, மூன்று ஆண்டுகளுக்குள்ளாக செய்யப்படும் முதலீடுகளுக்கு இந்த, 10 ஆண்டு சலுகை வழங்கப்படும்.
இதேபோல், 100 மில்லியன் டாலர் அதாவது, 755 கோடி ரூபாய்க்கு மேல், தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் ஜவுளி, உணவு, தோல் உனவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, நான்கு ஆண்டுகள் வரியில்லா கால சலுகை வழங்கப்படும்.இந்த பரிந்துரைகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி கொடுத்தால், நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|