பதிவு செய்த நாள்
13 மே2020
23:10
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், 28 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், மாருதி சுசூகியின் நிகர லாபம், 28 சதவீதம் சரிந்து, 1,322.3 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ன் இறுதி காலாண்டில், நிகர லாபம், 1,830.8 கோடி ரூபாயாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
நிகர விற்பனையை பொறுத்தவரை, மதிப்பீட்டு காலத்தில், 18 ஆயிரத்து, 208 கோடி ரூபாயாக உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 15.2 சதவீதம் குறைவாகும். கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், நிகர விற்பனை, 21 ஆயிரத்து, 473 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், மதிப்பீட்டு காலத்தில், மொத்த கார் விற்பனை, 16 சதவீதம் சரிந்து, 3.85 லட்சமாக உள்ளது.
கடந்த முழு நிதியாண்டை பொறுத்தவரை, நிகர லாபம், 25.78 சதவீதம் சரிந்து, 5,678 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், நிகர லாபம், 7,651 கோடி ரூபாயாக இருந்தது.இதேபோல், கடந்த முழு நிதியாண்டில், விற்பனையை பொறுத்தவரை, 75 ஆயிரத்து, 660 கோடி ரூபாயாக உள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில், இது, 86 ஆயிரத்து, 68 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|