பங்குச் சந்தைகளில் சரிவு : சோர்வடைந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் சரிவு : சோர்வடைந்த முதலீட்டாளர்கள் ... கொரோனாவால் களைகட்டும் ‘டிரைவ் இன் தியேட்டர்’ கொரோனாவால் களைகட்டும் ‘டிரைவ் இன் தியேட்டர்’ ...
நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2020
11:19

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதார மேம்பாடு, மக்கள் நலப்பணி போன்ற அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது. நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு பொருளாதார திட்டம் அறிவிக்கப்படும்’ என்றார்.தொடர்ந்து, மே 13ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க, ரூ.3 லட்சம் கோடிக்கான முதல் சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவித்தார். சொத்து பிணை இல்லாமல், தொழில் கடன் வழங்கும் முறை, முதல்முறையாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஆச்சரியமான ஒன்று. அந்த கடனை, நான்கு ஆண்டுகளில் திருப்பித்தரலாம். முதல் ஓராண்டுக்கு, தவணை வசூலிக்கப்படாது; வட்டி மட்டும் செலுத்தினால் போதும் என்பதும் ஆறுதலான அறிவிப்பு. ஆனால், இது தொழில் அமைப்புகளின் கடனை அதிகரிப்பதால், கடன் வாங்குவதில் கவனம் தேவை.



சரியான அணுகுமுறை
எம்.எஸ்.எம்.இ., தொழில் அமைப்புகளின் வரையறை அறிவிக்கப்பட்டுள்ளன. முதலீடு மற்றும் விற்றுமுதல் அடிப்படையில் அவற்றின் வரையறை மாற்றப்பட்டிருப்பது, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு பயன் தரும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வரையறையை தெளிவுபடுத்தியுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை அடிப்படையிலான சிறு, குறு, நடுத்தர தொழில்கள் எல்லாமும், இப்போதும் ஒரேவிதமான பலன்களை அடையப்போகின்றன.தற்போது கிடைக்கவுள்ள தொழிற்கடன்கள், இதுவரை நலிவடைந்துள்ள, செயல்படாத எம்.எஸ்.எம்.இ., தொழிற்கூடங்களுக்கு ஆதரவளிக்கும். இந்த அறிவிப்புகளிடையே, இன்னொரு இனிப்பான தகவலும், இந்திய தொழிற்துறையினரை உற்சாகமடைய செய்திருக்கிறது. அது, ‘இனி, ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதலுக்கு, உலக டெண்டர் வெளியிடப்படாது’ என்பது தான். இதனால், இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அரசு கொள்முதல் டெண்டர் கிடைக்கும். அதன்மூலம், பெரிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையும். இதுவும், ‘தற்சார்பு இந்தியா’வை தலைநிமிர வைக்கும் ஒரு சரியான அணுகுமுறை.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப்.சி.,), வீட்டுக் கடன் நிறுவனங்கள் (எச்.எப்.சி.,) மற்றும் நுண்கடன் நிறுவனங்களின் (எம்.எப்.ஐ.,) பணப்புழக்கத்துக்காக ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்த நிறுவனங்கள், கடனில் இருந்து மீள உதவும்.


கொஞ்சம் நிம்மதி

கட்டுமானத் தொழில்துறை கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும். காரணம், தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால், எதிர்பாரா சங்கடங்கள்’ என்ற விதியை இவை பயன்படுத்தலாம். இதன் மூலம், கட்டுமானப் பதிவு மற்றும் கட்டிமுடித்து ஒப்படைப்பதை, 6 மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி கிடைத்துள்ளது. சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், மீண்டும் திரும்பி வரும் தாமதங்களையும், இது ஈடு செய்யும். ரயில்வே, நெடுஞ்சாலை போன்ற அரசுத் துறையில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுக்கும், இது நன்மையாக அமையும்.நேரடி வரிவிதிப்பை பொறுத்தவரை, சம்பளம் அல்லாத பணம் வழங்கலின் போது, வரிப்பிடித்தம் (டி.டி.எஸ்., – டி.சி.எஸ்.,) 25 சதவீதம் குறைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, குறிப்பாக சேவைப் பிரிவில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். வரியில் குறைப்பு ஏதும் இல்லை. வரித் தணிக்கை படிவம் தாக்கலுக்கு, அக்., 31 வரையும் மற்றவர்களுக்கு, நவ., 30 வரையும் ‘கெடு’ தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வரித் தகராறுகளை தீர்த்து வைக்கும் ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சரியான பாதையில்...

தொழிலாளர் வைப்பு நிதி (இ.பி.எப்.,) சந்தாவை, 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்து செலுத்தும் சலுகை, சாதாரண குடிமகனுக்கு சிறிய நன்மையே என்றாலும், தொழிலதிபர்களுக்கு சிறிய அளவில் பணப்புழக்கமாக மாறும். தொடர்ந்து தவணை தவறாமல் செலுத்தும், ‘முத்ரா’ கடன் பயனாளிகளுக்கு, வட்டி குறைப்பு ஆறுதலான விஷயம். 50 லட்சம் தெருவோர வணிகர்களுக்கு, தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை எப்படி அடையாளம் கண்டு, கடன் வழங்கப்படும் என்பது சவாலான பணி.அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. இருந்தபோதும், தாராளமான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில், பல்வேறு துறைகளின் தேவைகளை ஈடு செய்யும் விதத்தில், திட்டங்கள் அறிவித்ததை பார்க்கும் போது, மோடி அரசு சரியான பாதையில் அடி எடுத்து வைத்திருப்பதையே காட்டுகிறது.


மகிழ்ச்சியும், வருத்தமும்!
நிர்மலா சீதாராமன் அறிவிப்பில், மகிழ்ச்சியான அம்சம் என்னவென்றால், கார்ப்பரேட் அல்லாத, கூட்டு நிறுவனம் (பார்ட்னர்ஷிப்), டிரஸ்ட், தனிநபர் உட்பட பிற எல்லா அமைப்புகளுக்கும், வருமான வரி பாக்கி (ரீபண்ட்)யை வரித்துறை விரைவில் திருப்பித்தர, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.‘நம்ம பணத்தை நமக்கே திருப்பி கொடுக்கிறார்கள். இதை ஊக்கச்சலுகையாக எடுத்துக்கொள்ள முடியுமா’ என்ற முணுமுணுப்புகள் கேட்டாலும், இது, இந்த இக்கட்டான காலத்தில், அரசு எடுக்கும் துரித நடவடிக்கை என்றே கொள்ள வேண்டும்.எம்.எஸ்.எம்.இ., தொழில் அமைப்புகளுக்கு, அரசு துறைகளில் இருந்து வர வேண்டிய நிலுகை தொகை, 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இந்த தொழில் அமைப்புகளுக்கு, அரசு துறைகள் உட்பட கம்பெனிகள் வரை தரவேண்டிய நிலுவை, கிட்டதட்ட ரூ.5 லட்சம் கோடி பாக்கி உள்ளது’ என்கிறார் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நிதின் கட்கரி. வருமான வரி ரீபண்ட் போல, அவற்றையும் விரைவாக வழங்க வேண்டும் என்று, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.நிதியமைச்சரின் அறிவிப்புகளில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், அது, தொழில் அமைப்புகளில், உற்பத்தி தொடக்கம், உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றுக்கு மட்டுமே ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. மக்களிடம் நுகர்வு அதிகரிக்க செய்யும் வகையில் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.இனி வரும் அறிவிப்புகள், நுகர்வோரிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தால் மட்டுமே, சந்தைகள் களைகட்டும்.எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு உயிர் கொடுக்க, கடன் அறிவிப்புகளை வரவேற்கலாம். அதேபோல், வட்டி குறைப்பு மற்றும் வரி குறைப்பும் அறிவித்திருந்தால், முழு பலன் கிடைக்கும். ஜி.எஸ்.டி., வரி குறைப்பு போன்ற முடிவெடுத்திருந்தால், நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்பதும், தொழில்துறையினரின் எண்ணம்.

ஜி.கார்த்திகேயன்

வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)