நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை! நுகர்வை அதிகரிக்கும் மாயாஜாலமே முதல் தேவை! ... கொரோனாவால் களைகட்டும் ‘டிரைவ் இன் தியேட்டர்’ கொரோனாவால் களைகட்டும் ‘டிரைவ் இன் தியேட்டர்’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘ரிலையன்ஸ்’ உரிமை பங்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2020
11:15

புதி­டில்லி : ‘ரிலை­யன்ஸ்’ இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் உரிமை பங்கு வெளி­யீடு, நாளை துவங்­கு­கிறது.

ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், நாட்­டில் இது­வரை இல்­லாத அள­வுக்கு, 53 ஆயி­ரத்து, 125 கோடி ரூபாய் மதிப்­பி­லான உரிமை பங்­கு­களை வெளி­யிட உள்­ளது.ஒரு நிறு­வ­னத்­தில் ஏற்­க­னவே பங்­கு­தா­ரர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்கு, சந்தை விலை­யை­வி­டச் சலுகை விலை­யில் பங்­கு­ களை வாங்­கும் அழைப்­பு ­தான் பங்­கு­தா­ரர்­க­ளுக்­கான உரிமை வெளி­யீடு என்­பது.இந்த உரிமை பங்கு கோரி பங்­கு­தா­ரர்­கள் நாளை துவங்கி, ஜூன், 3ம் தேதி வரை விண்­ணப்­பிக்­க­லாம்.

கடந்த மாதம், 30ம் தேதி­யன்று, உரிமை பங்கு வெளி­யீடு குறித்து அறி­வித்த ரிலை­யன்ஸ், அதன், 15 பங்­கு­க­ளுக்கு ஒரு பங்கு என்ற விகி­தத்­தில் வெளி­யிட இருப்­ப­தாக தெரி­வித்­தது. முன்­ன­தாக, உரிமை பங்­கு­க­ளுக்கு விண்­ணப்­பிக்க தகு­தி­யுள்­ள­வர்­களை தீர்­மா­னிப்­ப­தற்­கான பதிவு, 14ம் தேதி­யன்று மேற்­கொள்­ளப்­படும் என, அறி­வித்­தி­ருந்­தது.இதன் தொடர்ச்­சி­யாக, 15ம் தேதி­யன்று நிர்­வாக குழு கூடி வெளி­யீட்­டுக்­கான தேதிக்கு அனு­மதி வழங்­கி­யது. தகு­தி­யு­டை­ய­வர்­கள் உரிமை பங்­கு­கள் கோரி, நாளை முதல் விண்­ணப்­பிக்­க­லாம்.பங்­கின் விலையை பொறுத்­த­வரை, ஏப்­ரல், 30ம் தேதி விலை­யி­லி­ருந்து, 14 சத­வீ­தம் தள்­ளு­படி செய்து வழங்க இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி, ஒரு பங்­கின் விலை, 1,257 ரூபாய் ஆகிறது.
மொத்­தம், 42.27 கோடி பங்­கு­கள் விற்­ப­னைக்கு விடுக்­கப்­பட இருக்­கிறது.பங்­கு­தா­ரர்­கள் விண்­ணப்­பிக்­கும்­போது, முத­லில், 25 சத­வீத தொகையை மட்­டும் கொடுத்­தால் போது­மா­னது. மீதி தொகையை, பின்­னர் நிறு­வ­னத்­தின் அறி­விப்­பு­க­ளின்­படி செலுத்த வேண்­டி­ய­தி­ருக்­கும். தற்­போ­தைய திட்­டத்­தின்­படி, மீதி தொகை, அடுத்த ஆண்டு செலுத்­தும்­ப­டி­யாக இருக்­கும் என, தெரி­கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)