‘ரிலையன்ஸ்’ உரிமை பங்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்‘ரிலையன்ஸ்’ உரிமை பங்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் ...  சந்தையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் சரிவு சந்தையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொருளாதாரம் மேம்படும்: முதலீட்டாளர்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
11:37

மும்பை : நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் மெல்ல துவங்கியதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்ந்தன. நுகர்பொருட்கள், வாகனம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கினர்.


நேற்றைய வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 31,188.79 புள்ளிகள் வரை உயர்ந்து, பின் வர்த்தக இறுதியில், 114.29 புள்ளிகள் அதிகரித்து, 30,932.90 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.37 சதவீதம் உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 39.70 புள்ளிகள் அதிகரித்து, 91,067.25 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.44 சதவீத உயர்வாகும்.
சென்செக்ஸ் பிரிவில், ஐ.டி.சி., நிறுவன பங்குகள் விலை, 7 சதவீதம் உயர்வை கண்டன. இதையடுத்து, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, டி.சி.எஸ்., எச்.சி.எல்., ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரித்தன.

மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், என்.டி.பி.சி., பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., எல் அண்டு டி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.பொருளாதார செயல்பாடுகள் துவங்கியதை அடுத்து, நாட்டின் பொருளாதார நிலை விரைவில் மேம்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புது­டில்லி:கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், எல்.ஐ.சி., நிறு­வ­னம், புதி­தாக, 16 நிறு­வன ... மேலும்
business news
மும்பை:கட­னி­லி­ருந்து விடு­படும் நிலைக்கு வந்­து­விட்­டதை அடுத்து, ‘ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ்' நிறு­வ­னம், ... மேலும்
business news
புது­டில்லி:கடந்த நிதி­யாண்­டின், நான்­கா­வது காலாண்டு, மற்­றும் முழு ஆண்டு நிதி­நிலை முடிவு அறிக்­கை­களை ... மேலும்
business news
புதுடில்லி:உலகில் உள்ள, மிகவும் மதிப்பு வாய்ந்த, 10 பங்குச் சந்தைகள் பட்டியலில், மும்பை பங்குச் சந்தையும் ... மேலும்
business news
மும்பை:அன்னிய முதலீடுகள் அதிகரித்தது, உலக சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது, ரிலையன்ஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)