அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலைஅமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை ... ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2020
00:47

மும்பை:ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்­பு­கள், சந்­தை­யின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யாத கார­ணத்­தால், நேற்று பங்­குச் சந்­தை­கள் சரிவை கண்­டன.சந்­தை­யின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யும் வகை­யில், ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்­பு­கள் இல்­லாத கார­ணத்­தா­லும், வங்கி மற்­றும் நிதி நிறு­வன பங்­கு­கள் விலை சரி­வைக் கண்­ட­தா­லும், பங்­குச் சந்­தை­கள் சரிந்­தன.
மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ், நேற்று 260 புள்­ளி­கள் சரிந்­தது. வர்த்­த­கத்­தின் இடையே, 450 புள்­ளி­கள் வரை சரிந்து, பின், வர்த்­த­கத்­தின் முடி­வில், 260.31 புள்­ளி­கள் சரி­வு­டன், 30,672.59 புள்­ளி­களில் நிலை­பெற்­றது. இது, 0.84 சத­வீத சரி­வா­கும்.
இதே­போல், தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்­டி­யும், வர்த்­தக இறு­தி­யில், 67
புள்­ளி­கள் சரிந்து, 9,039.25 புள்­ளி­களில் நிலை­பெற்­றது.இது, 0.74 சத­வீத சரி­வா­கும்.

நேற்­றைய வர்த்­த­கத்­தில், மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ் பிரி­வில், ஆக்­சிஸ் பேங்க் அதி­க­பட்ச விலை சரிவை சந்­தித்­தது. இந்­நி­று­வன பங்­கு­கள், 5 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­தது.
இதை­ய­டுத்து, எச்.டி. எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி., பேங்க், இண்­டஸ்­ இண்ட் பேங்க் ஆகிய நிறு­வன பங்குகளின்
விலை­களும் சரிந்­தன.
மாறாக, மகிந்­திரா அண்டு மகிந்­திரா, இன்­போ­சிஸ், ஏஷி­யன் பெயின்ட்ஸ், அல்ட்­ரா­டெக் சிமென்ட், டெக் மகிந்­திரா ஆகிய நிறு­வன பங்­கு­கள் விலை உயர்வை சந்­தித்­தன.
முன்ன­தாக, ரிசர்வ் வங்கி, வட்­டி­வி­கித குறைப்பு உள்­ளிட்ட பல்­வேறு
அறி­விப்புகளை வெளி­யிட்­டது. இருந்­த­போ­தும், வங்கி துறை­யில், கடன்­களை மறு­சீ­ர­மைப்­பது சம்­பந்­த­மான எந்த நிவா­ர­ணத்­தை­யும் ரிசர்வ் வங்கி அறி­விக்­க­வில்லை. இது, சந்­தைக்கு ஏமாற்­ற­ம­ளித்­தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)