பதிவு செய்த நாள்
23 மே2020
22:22

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 48 ஆயிரத்து, 704 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, இந்திய மதிப்பில், 36.77 லட்சம் கோடி ரூபாய். இது நாட்டின், 12 மாத இறக்குமதிக்கு சமமாகும்.மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச் மாதம், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இதுவரை இல்லாத வகையில், 48 ஆயிரத்து, 723 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், மே, 15ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 69 ஆயிரத்து, 460 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த, 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 423.5 கோடி டாலர் அதிகரித்து, 48 ஆயிரத்து, 531 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது, 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 162.2 கோடி டாலர் அதிகரித்து, 48 ஆயிரத்து, 108 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 112 கோடி டாலர் அதிகரித்து, 44 ஆயிரத்து, 867 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பும், 61.6 கோடி டாலர் அதிகரித்து, 3,291 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.48 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|