பதிவு செய்த நாள்
23 மே2020
22:37

புதுடில்லி:இந்திய வாகன துறை, மீண்டும் விற்பனை உச்சத்தை எட்ட, இன்னும் ஆறு ஆண்டுகள் பிடிக்கும் என, ‘பாஷ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகன பாகங்கள் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகும் இது.நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்த, ‘பாஷ்’ நிறுவனம், விற்பனை சரியாமல் இதுவரை தாக்குப் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில், தேவை, 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிடும் என, எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், வாகன துறை விற்பனை, கடந்த நிதியாண்டில், 17 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாகவும்; இது இருபது ஆண்டுகளில் காணாத விற்பனை சரிவு என்றும் தெரிவித்து உள்ளது.
சலுகை
இது குறித்து போஷ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சவுமித்ர பட்டாச்சார்யா கூறியதாவது:இப்போது நாம் காண்பது, நம் வாழ்வில் காணாத மிகவும் சவாலான காலகட்டம் ஆகும். அன்மையில், மத்திய அரசு அறிவித்த நிதி ஊக்க திட்டத்தில், வாகன துறைக்கான எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.
அந்த திட்டத்தில், நுகர்வோர் எதிர்கொள்ளும் துறைகளுக்கு உதவக்கூடிய வகையிலான, தேவையைத் துாண்டும் நடவடிக்கைகள் கூட இல்லை.இந்த துறையானது, ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, பழைய வாகனங்களை சாலை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது.
மீண்டும் உச்சம்
இத்துறையில், வரி விதிப்பு, உலகின் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் இங்கு அதிகமாக இருக்கிறது. கொரோனா தாக்கத்துக்கு முன்பிருந்தே இத்துறை பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.இந்தியாவில் இத்துறை மீண்டும் உச்சம் தொட ஆறு ஆண்டுகள் ஆகும் என கருதுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|