ஓய்வூதியதாரர்களுக்கு   உகந்த'பிரதான் மந்திரி வாய வந்தனா' திட்டம்  3 ஆண்டுக்கு நீட்டிப்பு ஓய்வூதியதாரர்களுக்கு உகந்த'பிரதான் மந்திரி வாய வந்தனா' திட்டம் 3 ... ...  நியூசிலாந்து ஊடக நிறுவனம் ஒரு டாலருக்கு விற்பனை நியூசிலாந்து ஊடக நிறுவனம் ஒரு டாலருக்கு விற்பனை ...
வாழ்வின் பெரும் முதலீடுகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
08:10

‘உனக்கு பால் குடிக்கிறாயா, ஊருக்கு பால் குடிக்கிறாயா?’ என்ற வட்டார வழக்கு சொலவடையை கேட்டிருப்பீர்கள். ஊரார் பார்க்க நன்கு வாழ வேண்டும் என்ற சமூகத் தேவை, மனிதனுக்கு என்றுமே உண்டு. தன் மதிப்பை, தன் மக்கள் முன் நிலை நாட்ட, மனிதர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

குடும்ப நிகழ்ச்சிகள் என்பவை, இன்று பெரும்பாலும் ஊரார் முன், தன் அந்தஸ்தை பிரகடனப்படுத்தும் செலவுகள் என்றாகி விட்டன. தன் சக்திக்கு மீறி, திருமணங்களுக்கு செலவு செய்தலில், இந்தியா முதலிடம் பெறும்.கல்யாணக் கடன்களால், மீண்டு எழ முடியாத குடும்பங்கள், இங்கு நிறைய பார்க்கலாம். கல்யாணம் மட்டுமல்ல; வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேஷத்திலும் நாம் தேவையில்லாத செலவுகள் செய்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. நம்பாதவர்கள், ஒரு கல்யாண வீட்டில் நுழைந்து பார்த்தால் உண்மை தெரியும்.

செண்டை மேளம்கடந்த நுாற்றாண்டில், ஊர் கூடி, வீட்டில் உறவுகளும், சுற்றமும் நடத்தி வைத்த வைபவங்கள், இன்று முழுக்க முழுக்க, ‘அவுட்சோர்சிங்’ செய்யப்பட்ட, ‘கார்ப்பரேட்’ நிகழ்ச்சிகள் ஆகி விட்டன. நம் குடும்ப சடங்கை விட, இன்று எது, ‘டிரெண்டிங்’ என்று பார்த்து, அதைச் செய்து, பெயர் வாங்கத் துடிக்கின்றன, நம் குடும்பங்கள்.நம் கலாசார வேர்கள் பற்றியெல்லாம் அக்கறையில்லை; கேமராவிற்கு எது முக்கியம் என்று பார்த்துப் பார்த்து செய்வதில் தான் அக்கறை. அப்படி எடுத்த வீடியோவை, குடும்பத்தார் தவிர யாரும் பார்க்க துணிவதில்லை என்பது வேறு கதை. ஆனால், இந்த புகைப்படங்கள், சமூக ஊடகத்தில் ஏற்றப்படுவது இன்று அதி முக்கியம்.இதனால் தான், திருமணம் செய்து வைக்கும் வைதீகர்களை விட, அதைப் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளர்கள் தான், அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். வேற்று கலாசாரத்தில் உள்ள அனைத்தையும் உள் வாங்கி, அதற்காக தாராளமாக செலவு செய்கின்றனர்.செண்டை மேளம், ‘மெகந்தி’ விழா, கையேந்தி உண்ணும், ‘பபே’ முறை, இசை நடன நிகழ்ச்சி, கேக் வெட்டுதல் என, படு கலவையாக மாறி விட்டன, நம் திருமணங்கள். இவை அனைத்தும், செலவுசமாசாரங்கள் என்பதை கருத்தில் கொள்க.


இதில் கொடுமை என்னவெனில், வரும் விருந்தினர்கள் பெரும்பாலும், ஒரு வேளை மட்டும் வந்து, வரிசையில் நின்று பரிசு கொடுத்து, தம்பதியருடன் புகைப்படத்திற்கு ஒரு பிளாஸ்டிக் சிரிப்பு சிரித்து, பந்திக்கு முந்தி, அவசரமாய் வெளியேறுவது தான்.ஆனால், ‘நல்லா செலவு செஞ்சு பிரமாதப்படுத்திட்டாரு...’ என்று, அவர்களை சொல்ல வைக்கத் தான், இத்தனை செலவுகளும்! கல்யாணத்திற்கு வந்து கருத்து சொன்னவர் அதோடு விடுவாரா... தன் குடும்ப கல்யாணம் என்று வரும் போது, தான் பார்த்த விஷயங்களில் ஒன்றிரண்டு சேர்த்துக் கொள்வார்.

இந்த முடிவில்லாத சுழலில் தான், இன்று மாட்டிக் கொண்டிருக்கிறோம். சமூகம் மெச்ச விசேஷங்கள் செய்வது தவறில்லை; சக்திக்கு மீறிய செலவுகள் மூலம், கடனாளியாகாமல் இருப்பது, அதை விட முக்கியம்!அடுத்த தலைமுறை, ஒரு சுமையுடன், வாழ்க்கையை துவங்க வேண்டியது அவசியமா என்று யோசிக்க வேண்டாமா? எவ்வளவு செலவுகள் செய்தும், குறை இல்லாத கல்யாண வைபவம் உண்டா? குறை காண்பது என்பது, மனப்பாங்கு. குறையில்லாமல், எதையும் செய்ய வேண்டும் என்ற இந்த தலைமுறை எண்ணம் தான், இவர்களை மன நோயாளிகள் போல, பொருட்களை குவித்தும், செலவுகள் பெருக்கியும், நிம்மதியில்லாமல் வாழ வைக்கிறது.

சிறு குறைகளையும், பற்றாக்குறைகளையும், சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை தான், செலவுகளைகுறைக்கும்.கல்யாணம் மட்டுமல்ல, புதுமனை புகுவிழா, வளைகாப்பு, பிள்ளைப்பேறு, பெயர் சூட்டல், காதுகுத்து, பிறந்த நாள், கல்யாண நாள் என, நிகழ்ச்சிகள் வந்தபடியே இருக்கும்.முறை செய்தே மெலிந்த அப்பாக்களும், மாமாக்களும் இங்கு ஏராளம். அவர்கள் செய்ததை விட, அதிகம் திருப்பி செய்ய வேண்டும் என்ற போட்டியும், குடும்ப அரசியலும், செலவுகளை உயர்த்திக் கொண்டே இருக்கும். ஒருவர் கழுத்தை, மற்றொருவர் நெறிக்காமல், பல குடும்ப நிகழ்வுகளை, எளிமையாக நடத்தினால், இங்கு பல செலவுகள் குறைக்கப்படலாம்.


‘ஒவ்வொரு முறையும் ஒரு விசேஷம் வருதுன்னா, ‘பகீர்’ன்னு இருக்கும்.முறை செய்றது மட்டுமல்ல, பாசிடம் லீவு கேட்பது, பல நேரத்தில் சம்பளமில்லாமல் லீவு எடுப்பது, போக்குவரத்து செலவுகள் இப்படி தொடர் செலவுகள் தாம்.அன்னிக்கு கிராமத்துல பக்கத்துலேயே இருந்ததால எல்லாம் சுலபமா இருந்துச்சு; இன்னிக்கு சென்னையிலேருந்து, ஒவ்வொரு முறையும் ஊருக்கு போறதே பெரிய செலவு தான். ஆனால், இதைச் சொன்னா யாரு ஒத்துப்பா?’ என்றார், கிராமத்திலிருந்து, சென்னை வந்து பணி புரியும் ஒரு இளைஞர்.


முக்கிய நிகழ்வுகள்வீட்டு நிகழ்ச்சிகள் மிக முக்கியம்; இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், முக்கிய நிக்ழ்ச்சிகளுக்கு, அத்தியாவசிய செலவுகள் மட்டும் செய்வதன் மூலம், குடும்பத்தில் உள்ள செல்வம் வீணாய் கரையாது.பெருமைக்காக செய்வது எது, அத்தியாவசிய செலவுகள் எது என்று பட்டியல் போட்டாலே, இது சாத்தியம். ஒரு நாள் கூத்துக்கு செய்யும் செலவை விட, தம்பதியர் வாழ்விற்கு நல்ல முதலீடு செய்தால், எவ்வளவு அறிவுப் பூர்வமாக இருக்கும்!திருமணங்களும், மற்ற விசேஷங்களும் நம் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள்; அவை, நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியமானவை.ஆனால், அவற்றை எப்படி திட்டமிட்டு, திறமையுடன் நிகழ்த்துவது என்பது, ஒரு முக்கிய நிர்வாகத் திறன். ‘வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்றனர். இரண்டுமே வாழ்வின் பெரும் முதலீடுகள். அதனால், அவற்றை பல்லாண்டுகள் முன்னரே திட்டமிடுதல் முக்கியம்.– பணம் பெருகும்.
டாக்டர். ஆர். கார்த்திகேயன்கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்gemba.karthikeyan@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)