பதிவு செய்த நாள்
02 ஜூன்2020
22:02
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பாரேக் ஊதியம், 39 சதவீதம் அதிகரித்து, 34.27 கோடி ரூபாயாக இருப்பதாக, நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ல், சலீல் பாரேக் பெற்ற ஊதியம், 24.67 கோடி ரூபாயாகும்.கடந்த நிதியாண்டில் இவர், 16.85 கோடி ரூபாயை சம்பளத் தொகையாகவும், 17.04 கோடி ரூபாயை பங்குகளாகவும், 38 லட்சம் ரூபாயை வேறு வகையிலும் பெற்று உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி தன் சேவைக்காக எந்த தொகையும் வேண்டாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி யு.பி.பிரவீன் ராவ் ஊதியம், 17.1 சதவீதம் அதிகரித்து, 10.6 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இவர், 9.05 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார்.
இதற்கிடையே, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன் ஊதியம், கடந்த நிதியாண்டில், 16 சதவீதம் அளவுக்கு குறைந்து, 13.3 கோடி ரூபாயாக உள்ளது.விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிதாலி இசட் நீமுச்வாலா ஊதியம், கடந்த நிதியாண்டில், 11.8 சதவீதம் உயர்ந்து, 33.38 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|