பதிவு செய்த நாள்
04 ஜூன்2020
01:34

சென்னை:வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு, சிறப்பு கடன் வசதி மற்றும் தவணை கால ஒத்திவைப்பை நீட்டிப்பது உள்ளிட்ட சலுகைகளை, தேசிய வீட்டுவசதி வங்கியான, என்.எச்.பி., அறிவித்துள்ளது.
ஊரடங்கால் பல்வேறு துறைகள் முடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு சிறப்பு நிதி உதவிகளை அறிவித்தது. இதன்படி, வீட்டுவசதி கடன் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.இந்த அறிவிப்புகளை அமல்படுத்துவதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு:
இந்திய ரிசர்வ் வங்கி, மே, 23ல் பிறப்பித்த சுற்றறிக்கை அடிப்படையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் வீட்டுவசதி கடன்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் கடன் பெறலாம்.இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், தேசிய வீட்டுவசதி வங்கி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையில், கடன் பெறும் நிறுவனங்கள், தங்களுக்கான தகுதியை அறிந்து கொள்ளலாம்.
மேலும், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், ஏற்கனவே பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கான விலக்கு காலம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் வாங்கிய கடன்களுக்கான தவணை நிறுத்த கால சலுகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|