பதிவு செய்த நாள்
04 ஜூன்2020
01:40

புதுடில்லி:ஒரே மாதத்திற்குள்ளாக, 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட, சீன செயலிகளை நீக்குவதற்கான, ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ எனும் செயலி, தற்போது, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்தியா – சீனா இடையே எல்லை மீறல் உள்ளிட்ட பல பிரச்னைகள் எழுந்த நிலையில், சீன செயலிகளை நீக்குவதற்காக, ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ எனும் செயலியை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்தது.இதையடுத்து, 50 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். தற்போது, இந்த செயலி ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து, கூகுள் தரப்பில் விளக்கம் தரப்படவில்லை.
இருப்பினும், செயலியை உருவாக்கியவர்கள், ’கூகுள் கொள்கைகளுக்கு மாறாக இருக்கும் செயலிகளை நீக்குவது வழக்கமாக நடப்பது தான்’ என்று தெரிவித்துள்ளனர்.இந்த செயலி, கல்வி நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், சீன செயலிகளை நீக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதால், கூகுள் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த செயலியை, புதிதாக நிறுவ இயலாது என்றாலும், ஏற்கனவே நிறுவப்பட்ட போன்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பாதுகாப்பில் ரிஸ்க். சமீபத்தில், ’டிக் டாக்’ செயலிக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட, ’மித்ரன்’ செயலியையும், கூகுள், அதன் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|