’அமேசானின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரணும்’: எலன் மஸ்க் ஆவேசம்’அமேசானின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரணும்’: எலன் மஸ்க் ஆவேசம் ... கொரோனா ஊரடங்கினால் அதிக லாபம் ஈட்டிய ரஷ்ய கேம் நிறுவனம் கொரோனா ஊரடங்கினால் அதிக லாபம் ஈட்டிய ரஷ்ய கேம் நிறுவனம் ...
வாங்குபவர், விற்பவரை இணைக்கும் இணையதளம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
09:14

வியாபாரிகளுக்கு, உற்பத்தி செய்யும் பொருட்களை எப்படி விற்பது என்ற கவலை. அதற்காக, உலகளவில் விற்க, ஒரு இணையதளம் உதவுகிறது. ‘டிரேடோலாஜி என்ற இணையதளம் வாங்குபவரையும், விற்பவரையும் இணைக்கும் இணையதளம்.

தற்போது அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சிமென்ட், பிளைவுட், டி.எம்.டி., பார், உணவு எண்ணெய் ஆகிய பொருட்களை மட்டும் வாங்குபவரையும், விற்பவரையும் இணைக்கிறது.இந்த இணையதளத்தில், 1.25 லட்சம் விவசாய விளைபொருட்கள் வாங்குபவர்களும், 40 ஆயிரத்து, 650 கட்டுமான பொருட்கள் வாங்குபவர்களும் பதிவு செய்துள்ளனர். விற்பனையாளர்கள், 16 ஆயிரத்து, 890 பேரும் பதிவு செய்துள்ளனர்.

எப்படி நடக்கிறது?வாங்குவோர், தங்களுக்கு பிடித்தமான விற்பவர்களை தேர்ந்தெடுத்து, பொருட்களின் தேவைகளை கொடுக்கின்றனர். தரம், டெலிவரி டேர்ம்ஸ், இன்ஸ்பெக் ஷன், பொருட்களுக்கான பணம் எப்படி கொடுக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் இருக்கும். இவற்றை ஒப்புக்கொண்ட விற்பனையாளர்கள், தங்களுடைய பொருட்களுக்கான விலை விபரங்களை வாங்குபவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.

விற்பவர்கள் பங்கு கொள்வதால், இது ‘ரிவர்ஸ் பெட்டிங்’ முறையில் நடக்கிறது.எல்லோரிடமிருந்தும் கொட்டேஷன் வந்த பின், வாங்குபவர், தங்களுக்கு பிடித்தமான விற்பனையாளரிடம் விலையை குறைக்க வேண்டும் என விரும்பினால், கவுண்டர் ஆபர் கொடுக்குமாறு கூறுவர். ஆர்டர் செய்த பின், பொருட்களை வாங்குபவர், அதற்கான பணத்தை ‘எஸ்க்ரோ அக்கவுன்டில்’ செலுத்துவார் அல்லது எல்.சி., (லெட்டர் ஆப் கிரிடிட்) ஓபன் செய்வார்.இந்த வியாபாரத்துக்காக, ஒரு சிறிய கமிஷனை இந்த இணையதளம் பெற்றுக்கொள்கிறது.
விபரங்களுக்கு, www.tradologie.com.

இ-–கிராப்ட் இந்தியா இது, இந்திய கலைப்பொருட்களை ஆன்லைனில் விற்க ஏற்படுத்தப்பட்ட ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம். பழங்கால பொருள், கைவினை பொருள் (மார்பிள், மெட்டல், ேஹண்ட்மேட் பேப்பர், சாண்ட் ஸ்டோன்), ஓவியங்கள், மரவேலைப்பாடு பொருட்கள், துணி வகைகள் என, பலதரப்பட்ட பொருட்களும் கிடைக்கின்றன. இந்திய நாட்டு கலைப்பொருட்களை ஒரு இடத்தில் வாங்குவதற்கு ஏற்ற ஒரு இணையதளம் இதுவாகும். உள்நாட்டு விற்பனை மட்டுமல்ல, வெளிநாட்டு விற்பனையும் செய்கிறார்கள். www.ecraftindia.com
–சேதுராமன் சாத்தப்பன்-–
சந்தேககங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com, www.startupbuisnessnews.com.

மொபைல் எண்: 98204–51259.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)