வாங்குபவர், விற்பவரை இணைக்கும் இணையதளம்!வாங்குபவர், விற்பவரை இணைக்கும் இணையதளம்! ... வாடகை வீடுகளுக்கு அதிகரிக்கும் தேவை வாடகை வீடுகளுக்கு அதிகரிக்கும் தேவை ...
கொரோனா ஊரடங்கினால் அதிக லாபம் ஈட்டிய ரஷ்ய கேம் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2020
13:06

ரஷ்யாவைச் சேர்ந்த ஓர் மொபைல் கேம் டெவலப்பர் கொரோனா காலத்தில் அதிக லாபம் ஈட்டி உள்ளார்.

பிளேரிக்ஸ் என்ற கேமை இகோர் புக்மேன் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதுவரை 165 மில்லியன் பேர் இந்த கேமை பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த மார்ச் முதல் மேவரை இதன் பதிவிறக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் 460 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளது இந்த நிறுவனம். இது சராசரி லாபத்தைவிட 40 சதவீதம் அதிகம். ஊரடங்கு காலத்தில் பதிவிறக்கம் அதிகரித்துள்ளது கேம் டெவலபர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதனால் புதிய கேம்களை உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.


2019ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது புளேரிக்ஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளது. ஊரடங்கின்போது ரஷ்யாவில் வீடியோ கேம் விளையாடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக புக்மேன் தெரிவித்துள்ளார்.

கார்டன்ஸ்கேப் என்கிற பிளேரிக்ஸின் கேம் வாடிக்கையாளர்களை அதிமாகக் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இதில் அடுத்தடுத்த கட்டங்களில் உள்ள சவால்கள்தான் என கேம் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

2004ம் ஆண்டு இகோர் புக்மேனும் அவரது சகோதரர் டிமிட்ரியும் பிளேரிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினர். தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வோல்காடாவில் மாணவர்களாக இருந்த காலகட்டத்தில் அவர்கள் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டனர். பிளேரிக்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட புதிய கேம் நிறுவங்களை வாங்கியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)