பதிவு செய்த நாள்
09 ஜூன்2020
11:50

மும்பை: நேற்று, மும்பை பங்குச் சந்தை மற்றும், தேசிய பங்குச் சந்தை ஆகிய, இரு சந்தைகளுமே துவக்கத்தில் அதிகரித்து, பின், கீழே இறங்கின. இருப்பினும், சிறிது உயர்வுடனே முடியும் வகையில் சமாளித்துக் கொண்டன.
நேற்றைய தினம், வர்த்தகர்கள் லாபத்தை அடையும் பொருட்டு, அதிக பங்குகளை விற்றதை அடுத்து, துவக்கத்தில் உயர்ந்த சந்தை, பின் சரிவைக் கண்டது.மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ துவக்கத்தில், 640 புள்ளிகள் அதிகரித்தது. இருப்பினும், வர்த்தகத்தின் இறுதியில், 83.34 புள்ளிகள் உயர்வுடன், 34370.58 புள்ளிகளில் முடிந்தது. இது, 0.24 சதவீதம் உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், வர்த்தகத்தின் இறுதியில், 25.30 புள்ளிகள் உயர்வுடன், 10167.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.25 சதவீதம் உயர்வாகும். ‘சென்செக்ஸ்’ பிரிவில், இண்டஸ்இண்ட் பேங்க் அதிக விலை உயர்வை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 7 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தன.
இதையடுத்து, ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி., டைட்டன், இன்போசிஸ், டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தன.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகள் விலை, துவக்கத்தில், 3 சதவீதம் வரை அதிகரித்து, அதன், 52 வார உயர்வை தொட்டது. இதற்கு, அபுதாபி முதலீட்டு ஆணையம், ’ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தின், 1.16 சதவீத பங்குகளை, 5,684 கோடி ரூபாய்க்கு வாங்கியது காரணமாக அமைந்தது. இருப்பினும், வர்த்தகர்கள் லாபம் பார்க்கும் நோக்கில், இந்நிறுவன பங்குகளை அதிகம் விற்பனை செய்ததை அடுத்து, விலை சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ’சென்செக்ஸ்’ பிரிவில் உள்ள, 30 நிறுவனங்களில், 16 நிறுவனங்களின் பங்குகள், விலை உயர்ந்தன. 14 நிறுவனங்களின் பங்குகள், விலை சரிவைக் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|