பதிவு செய்த நாள்
09 ஜூன்2020
11:51

புதுடில்லி: நேற்றைய பங்கு வர்த்தகத்தின் போது, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்கு விலை, 52 வார உச்சத்தை தொட்டது.
அபுதாபி முதலீட்டு ஆணையம், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில், 5,683.50 கோடி ரூபாயை முதலீடு செய்ததை அடுத்து, ரிலையன்ஸ் பங்கு விலை, நேற்று உச்சம் தொட்டது.இந்நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் நேற்று, 2.74 சதவீதம் அதிகரித்து 1,624 ரூபாயாக உயர்ந்தது. இது 52 வாரத்தில் காணாத உயர்வாகும். இருப்பினும், வர்த்தக முடிவில் -பங்குகள் விலை, 0.67 சதவீதம் சரிந்து, 1,570 ரூபாயாக நிலை பெற்றது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில், தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வரும் நிலையில், அபுதாபி முதலீட்டு ஆணையம், 1.16 சதவீத பங்குகளை, 5,683.50 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.இதையடுத்து, ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு, 97 ஆயிரத்து, 886 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஏற்கனவே கடந்த, 5ம் தேதியன்று, அபுதாபியைச் சேர்ந்த, ‘முபதாலா’ முதலீட்டு நிறுவனம், ஜியோவின், 1.85 சதவீத பங்குகளை, 9,094 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இந்நிலையில், அபுதாபி முதலீட்டு ஆணையமும் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின், 21 சதவீத பங்குகளை விற்பனைசெய்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|