பதிவு செய்த நாள்
09 ஜூன்2020
11:52

சென்னை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனும், இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களையும், ‘மாருதி சுசூகி’ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த, 2019 – -20ம் நிதியாண்டில், ஒரு லட்சம் சி.என்.ஜி., கார்களை விற்பனை செய்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மாருதி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:‘மிஷன் கிரீன் மில்லியன்’ என்ற திட்டத்தின் கீழ், 10 லட்சம் பசுமை வாகனங்களை விற்பனை செய்ய, மாருதி நிறுவனம் திட்டமிட்டது. சி.என்.ஜி., இன்ஜின் பொருத்தப்பட்ட பயணியர் வாகனங்கள், 2019 – 20ம் நிதியாண்டில், அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, நாடு முழுதும், ஒரு லட்சத்து, 6,443 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010ல், சி.என்.ஜி., மூலம் இயங்கும் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை, 10 லட்சம் பசுமை வாகனங்கள் நாடு முழுதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், சி.என்.ஜி., வாகன விற்பனையின் ஒருங்கிணைந்த ஆண்டு வளர்ச்சி விகிதம், 15.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|