ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ... டிரயம்பின் புதிய மாடல் பைக்கின் சிறப்பம்சங்கள் டிரயம்பின் புதிய மாடல் பைக்கின் சிறப்பம்சங்கள் ...
ரிலையன்சுக்கு ரூ.98 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்றுத் தந்த மனோஜ் மோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2020
22:13

புது­டில்லி:கொரோனா காலத்­தி­லும், ‘ரிலை­யன்ஸ் ஜியோ பிளாட்­பார்ம்ஸ்’ நிறு­வனத்­தில், கிட்­டத்­தட்ட, 98 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீ­டு­கள் குவிந்­தது அனை­வ­ரும் அறிந்­ததே.
இந்த சாத­னையை படைப்­ப­தற்கு, முகேஷ் அம்­பா­னிக்கு வலது கையாக இருந்து செயல்­
பட்­டவர், மனோஜ் மோடி.

பொது­வெ­ளி­யில் அதி­கம் தெரி­யாத பெயர், மனோஜ் மோடி. ‘பேஸ்­புக்’ நிறு­வ­னம், ஜியோ­வில், 43 ஆயி­ரத்து, 574 கோடி ரூபாய் முத­லீடு செய்­த­தில், மனோஜ் மோடி­யின் பங்கு மிகப் பெரி­யது.
அதைத் தொடர்ந்து, ஒவ்­வொரு நிறு­வ­னத்­து­ட­னான பேரத்­தி­லும், இவர் பங்­க­ளிப்பு மிக அதி­கம் என்­கின்­ற­னர்.

மூன்று தலைமுறை

மனோஜ் அம்­பானி, 1980ம் ஆண்­டு­க­ளி­ல் இ­ருந்து, தொடர்ந்து ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தில்
பணி­யாற்றி வரு­கி­றார்.இன்­னும் சொல்­வ­தென்றால், திரு­பாய் அம்­பானி, முகேஷ் அம்­பானி, இஷா மற்­றும் ஆகாஷ்அம்­பானி என, மூன்று தலை­மு­றை­யு­டன் பணி­புரி­யும் வாய்ப்பு பெற்­ற­வர்.முகேஷ் அம்­பா­னி­யின் கல்­லுா­ரித் தோழ­ரும் கூட.

மனோஜ் மோடி, ‘ரிலை­யன்ஸ் ரீடெய்ல்’ மற்­றும் ரிலை­யன்ஸ் ஜியோ பிளாட்­பார்ம்ஸ்
நிறு­வ­னங்­களில் இயக்­கு­னராக இருக்­கி­றார். இவ­ரது பங்­க­ளிப்பு குறித்து கேட்­ட­போது, ‘‘நான் பேரங்­களில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வ­தில்லை. எனக்கு திட்­டங்­களை புரிந்­து­கொள்ள இய­லாது. தொலை­நோக்கு பார்­வை­கூட கிடை­யாது,’’ என்று முடித்­து­விட்­டார்.


இருப்­பி­னும், அவ­ரது பணி குறித்து கூறும்­போது, ‘‘நான் இங்­கி­ருப்­ப­வர்­க­ளு­டன் பழ­கு­கி­றேன்; அவர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கிறேன். ஏதா­வது செய்ய முடி­யும் என்­ப­தற்கு வழி­காட்­டு­கி­றேன். அவ்­வ­ளவு தான்,’’ என்­றார்.இறு­தி­யாக ரிலை­யன்ஸ் கொள்கை குறித்து தெரி­வித்­தார்.

தெரியாத துாண்கள்

நிறு­வ­னத்­தின் கொள்கை மிக எளி­மை­யா­னது. நம்­மு­டன் பணி­பு­ரி­யும் அனை­வ­ரும் பணம்
சம்­பா­திக்­கா­விட்­டால், நம்­மால் நிலை­யான ஒரு வணி­கத்தை வைத்­தி­ருக்க முடி­யாது என்­பது தான்.எல்லா நிறு­வ­னங்­களிலும், மனோஜ் மோடி போன்ற, வெளியே அதி­கம்தெரி­யாத துாண்கள்இருக்­கத் தான் செய்­கின்­றன.


கொரோனா பாதிப்பிலும்
பங்கு வெளியீட்டு முயற்சி

புது­டில்லி, ஜூன் 13–
‘ஹேப்­பி­யஸ்ட் மைண்டு டெக்­னா­ல­ஜிஸ்’ நிறு­வ­னம், புதிய பங்­கு­கள் வெளி­யீட்­டுக்­காக அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’க்கு விண்­ணப்­பம் செய்­துள்­ளது.
தக­வல் தொழில்­நுட்ப துறை­யைச் சேர்ந்த, ஹேப்­பி­யஸ்ட் மைண்டு
டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, அதன் மூலம், 110 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.
மேலும், நிறு­வ­னர்­கள் வசம் இருக்­கும், 3.56 கோடி பங்­கு­க­ளை­யும் விற்­பனை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது. நாட்­டில், கொரோனா தொற்று
ஏற்­பட்­ட­தை­ய­டுத்து,
மார்ச் மாதம் நாடு
முடக்­கப்­பட்­டது.
அதன் பிறகு, முதன்
முத­லாக பெரி­ய­ள­வி­லான புதிய பங்கு வெளி­யீட்­டுக்கு,
இந்­நி­று­வ­னம் தான்
விண்­ணப்­பம் செய்­துள்­ளது.
இந்த புதிய பங்கு வெளி­யீட்­டின் மூலம்
திரட்­டப்­படும் நிதியை, நடை­முறை மூல­தன தேவை மற்­றும் பொது­வான நிறு­வ­னத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தி கொள்ள நிறுவ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.
பெங்­க­ளூரை அடிப்­ப­டை­யாக கொண்டு செயல்­பட்டு வரும் இந்­நி­று­வ­னம், பங்­கு­களை, மும்பை பங்­குச் சந்தை மற்­றும் தேசிய பங்­குச்சந்­தை­களில் பட்­டி­ய­லிட உள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டீஸ் மற்­றும் நோமுரா பைனான்­ஷி­யல் அட்­வை­சரி மற்­றும் செக்­யூ­ரிட்­டீஸ் ஆகிய நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)