ரிலையன்சுக்கு ரூ.98 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்றுத் தந்த மனோஜ் மோடிரிலையன்சுக்கு ரூ.98 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்றுத் தந்த மனோஜ் மோடி ... இயர்போன்களில் எது சிறந்தது? இயர்போன்களில் எது சிறந்தது? ...
டிரயம்பின் புதிய மாடல் பைக்கின் சிறப்பம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
16:07

விலையுயர்ந்த கிரூஸர் பைக்குகள் தயாரிப்பில் முன்னணி வகுக்கும் நிறுவனம் டிரயம்ப். பிரிட்டன் மோட்டர் சைக்கிள் நிறுவனமான டிரயம்ப் 1983ம் ஆண்டு ஜான் புளூர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதற்கு இந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. சர்வதேச பைக் ஷோக்களில் அனைவரின் கண்ணைக் கவரும் பைக் இது. எஸ்யூவி கார் விலையில் உள்ள டிரயம்ப் வழக்கமாக விற்பனையில் களைகட்டும்.

பெரும்பாலான டிரயம்ப் பைக்குகள் தாய்லாந்தில் தயாரிக்கப்படுகின்றன. டிரயம்ப் போன்வில் டி100 பிளாக் என்ற மாடல் பைக்கை அறிமுகம் செய்து உள்ளது டிரயம்ப் நிறுவனம். ஏற்கனவே வெளியாகி விற்பனையில் களைகட்டிய டி100 பிளாக், டி120 பிளாக் ஆகிய மாடல்களின் அப்கிரேடட் வெர்ஷந்தான் போன்வில். கலர் ஸ்கீம் மட்டுமே தற்போது மாற்றப்பட்டு உள்ளது.

போன்வில் டி100 பிளாக் மேட் பிளாக் நிறத்துடனும் போனி டி120 ஜெட் பிளாக் நிறத்துடம் தயாரிக்கப்பட்டுள்ளன. 900 சிசி டுவின் ஸ்பார்க் எஞ்சினுடனும் 5900 ஆர்பிஎம்-ல் 54 பிஹெச்பி ஹார்ஸ் பவருடனும் போன்வில் தயாராகி உள்ளது. இது தவிர 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் இதில் உள்ளது.

போன்வில் டி120 பிளாக் 1200 சிசி ஹை டார்க் லிக்விட் கூல்டு எஞ்சினுடன் தயாராகிறது. இதில் 6 ஸ்பீல் கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இம்மொபிலைசர், ஹீடட் கிரிப்ஸ், ரைட் பை வயர், டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. டி100-ன் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை 8.87 லட்சம் எனவும் டி 120-ன் விலை 9.97 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)