இயர்போன்களில் எது சிறந்தது?இயர்போன்களில் எது சிறந்தது? ...  ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ‘ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூக்கி செலாரியோ 2020; ஓர் பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
19:52

மாருதி கார் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு விற்பனையில் களைகட்டிய கார் வகை மாருதி சுசூக்கி செலாரியோ. இது கடந்த ஐந்தாண்டுகளாக இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஆதர்ச கார் வகைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.

சமீபத்தில் லாஞ்ச் செய்யப்பட்ட இதன் 2020 வெர்ஷன் வேரியண்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாகும் முன்னரே இதற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இரு வேரியண்ட்கள் வெளியாகி உள்ளன.

விஎக்ஸ்ஐ வேரியண்ட் 5.60 லட்சம் எனவும் விஎக்ஸ்ஐ (ஒ) வேரியண்ட் 5.68 லட்சம் (எக்ஸ் ஷோரூம் டில்லி) எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிஷன் கிரீன் மில்லியன் என்ற திட்டதை அமல்படுத்த மாருதி சுசூக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிரீன் வெஹிகிள்ஸ் எனப்படும் (சின்.என்.ஜி ஸ்மார்ட் வெஹிகிள்ஸ், ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிகில்ஸ்) சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனத் தயாரிப்பில் மாருதி சுசூக்கி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கச்சா எண்ணைய் ஏற்றுமதியை குறைத்து இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்க, இந்திய அரசு முயன்று வருகிறது. அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மாருதி சுசூக்கி நிறுவனம் இந்த ஏற்ப்பாட்டை செய்துள்ளது.

தற்போது மாருதி சுசூக்கி நிறுவனத்தில் அனைத்து மாடல் கார்களிலுமே சி.என்.ஜி இயற்கை எரிவாயு நிரம்பி வாகனம் ஓட்ட முடியும். பெட்ரோலை விட விலை குறைவான சி.என்.ஜி நடுத்தர மக்கள் லாங் டிரைவ் செல்ல ஏதுவாக விலை மலிவாக உள்ளது. கொரோனா தாக்கதையும் தாண்டி இந்திய அரசு நாடு முழுவதும் சி.என்.சி ஸ்டேஷன்களை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு நிரப்பிக்கொள்ளலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)