பதிவு செய்த நாள்
14 ஜூன்2020
09:16

ஒரு கிருமி, ஒட்டுமொத்த உலகையே முடக்கியுள்ளது. முகக்கவசம் அணிந்த பின், இன்னொரு நபருடன் பேசும்போது நாம் சிரிக்கிறோமா அல்லது கோபப்படுகிறோமா என்பதை வெளிப்படுத்த இயலாமல் போகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனி, வெளிப்படையாக (டிரான்ஸ்பரன்ட்), முகத்தின் உணர்ச்சிகளை காட்டும் விதமாக, அதேநேரம், வெளிக்காற்றை சுவாசிக்கவும் முடியும் என்ற அளவுக்கு, முகக்கவசத்தை கண்டுபிடித்திருக்கிறது. அதை சந்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வருட ஆரம்பத்தில் கொண்டு வர இருக்கிறது.
முகக்கவசம், மற்றவர்களுக்கு, நமது முகத்தின் பகுதிகள் தெளிவாக தெரியும் வகையிலும், ஒளிபுகும் தன்மையுடனும், வெளிக்காற்றை சுவாசிக்கும் வகையிலும், அதேசமயம் நோய்க் கிருமிகள் உள்ளே வராத வகையிலும் இருந்தால் எப்படி இருக்கும்.இதையெல்லாம் மனதில் வைத்து தான், அந்நாட்டில் Ecole polytechnique fédérale de Lausanne (EPFL) – (www.epfl.ch) என்ற ஆராய்ச்சி நிறுவனம், சுவிஸ் நாட்டில் இருக்கும் Swiss Federal Laboratories for Materials Science and Technology – EMPA (www.empa.ch) மெட்டீரியல் சயின்ஸ் ரிசர்ச் சென்டருடன் இணைந்து, இது போன்ற ஒரு துணியை, ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க துவங்கினர்.
இதை HMCARE என்ற ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் வாயிலாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கின்றனர். ‘பயோமாஸ்’ வாயிலாக பெறப்பட்ட இழைகளை பயன்படுத்தி, மூன்று அடுக்கு கொண்ட ஒரு நெகிழ்வான, சுவாசிக்கக்கூடிய பொருளை உருவாக்கியது; அவை கிட்டத்தட்ட வெளிப்படையானவை. அதை ஹலோமாஸ்க் (HelloMask) என்று அழைக்கின்றனர். இந்த முகக்கவசம் இந்தாண்டு கடைசியில், அல்லது 2021 துவக்கத்தில் விற்பனைக்கு வரும்.
இலவச கருத்தரங்குதவறில்லாத ஏற்றுமதியை சரிவர கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், பலருக்கும் இருக்கும். அதை பூர்த்தி செய்யும் விதமாக, ‘ஜூம் செயலி’ வாயிலாக, ‘ஏற்றுமதி – அடிப்படையிலிருந்து, ஆவணங்கள் வரை’ என்ற கருத்தரங்கை, இன்று, காலை, 11:00 மணிக்கு, லகு உத்யோக் பாரதி என்ற அமைப்பு நடத்துகிறது. இதை ‘Laghu Udyog Bharti Tamilnadu’ என்ற யூடியூப் சேனலில் பார்க்கலாம்.
–சேதுராமன் சாத்தப்பன்–
சந்தேகங்களுக்கு: sethuraman.sathapapn@gamil.com,
www.startupbusinesnews.com.
மொபைல் எண்: 98204 51259.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|