‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ... பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்! பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்! ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
எப்படி இருக்கிறது அமேஸ்பிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ? ஓர் பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
19:31

ஸ்மார்ட் வாட்ச்கள் தற்போது இளைஞர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேரம், தேதி, தினம் காட்டும் வெறும் வாட்ச் என்ற எல்லையைத் தகர்த்தெறிந்த ஸ்மார்ட் வாட்ச்கள், பாடல்கள் கேட்க, செல்போன் இல்லாமலேயே உரையாட, பிட்னஸ் டிராக் செய்ய என பல பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

சீன நிறுவனமான ஹூமியின் சப் பிராண்ட் அமேஸ்பிட். ஸ்மார்ட் வாட்சுகள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனம் இது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் அதிகமாக விற்பனையாகும் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் வாட்ச் பிராண்ட்.

இந்நிலையில் அமேஸ்பிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்சுகள் கடந்த ஜன., மாதம் லாஞ்ச் செய்யப்பட்டது. இது இந்தியாவில் ஜூன் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

அமேஸ்பிட்.காம் தளத்திலும் இந்த வாட்சுகள் கிடைக்கின்றன. ஆப்லைன் பார்ட்னர்களான க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், பூர்விகா மொபைல்ஸ் ஆகிய கடைகளிலும் கிடைக்கின்றன.

ரூ.9,999 விலையில் காக்கி, ஆர்மி கிரீன் உள்ளிட்ட நான்கு நிறங்களில் கிடைக்கும் அமேஸ்பிட் வாட்சுகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை பேட்டரி தாக்குபிடிக்கும் திறன் கொண்டது. 1.3 இஞ்ச் (360*360 பிக்ஸல்) ஆமோல்டு டிஸ்பிளே கொண்டது கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாகும்.

390 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட இது ஜிபிஎஸ் ஆன் செய்யாமல் இருந்தால் 66 நாட்கள் வரை ரீசார்ச் செய்யப்படாமல் இயங்கும் ஆற்றல் கொண்டது. அமேஸ்பிட் வாட்ச்களை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் போதுமானது. இதுதவிர 5 ஏடிஎம் வாட்டர் ரெஸிஸ்ட் (நீர்நிலையின் ஆழத்தில் 50 மீட்டர் வரை வேலை செய்யும்) கொண்டது. 12 தர சோதனைகளைத் தாண்டி வந்துள்ளது.

58 கிராம் எடை கொண்ட இந்த வாட்ச், 47.7x47.7x13.5 மில்லி மீட்டர் டைமென்ஷன் கொண்டது.
ஹார்ட் ரேட் சென்ஸார், 3 ஆக்ஸிஸ் ஆக்ஸிலரேட்டர், ஜியோ மேக்னெடிக் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்ஸார் உள்ளிட்ட சென்ஸார்கள் இதில் உள்ளன. புளூடூத் வி5.0 கனெக்டிவிட்டி வசதி கொண்டது. ஜிம், ஜாகிங் பயிற்சி மேற்கொள்ளும் சமயத்தில் இது துல்லியமாக நடை வேகம், இதயத் துடிப்பை கணக்கிடும். கால் ரிமைண்டர், எஸ்.எம்.எஸ் ரிமைண்டர், செல்போன் நோட்டிபிகேஷன்கள், காலநிலை, மொபைல் பேமெண்ட் ஆப்ஷன் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் அடங்கி உள்ளன.

இதன் போட்டியாளர்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்கள் 15 ஆயிரத்துக்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரம் விலைக்கு அதற்கிணையான வசதிகளை அமேஸ்பிட் அளிக்கிறது. இதனால் இதனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு இந்தியாவில் அமேஸ்பிட் கடும் போட்டி நிறுவனமாக விளங்குக்கிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)