‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ...  முதலில் சட்டி நிரம்பட்டும்! முதலில் சட்டி நிரம்பட்டும்! ...
பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
09:06

‘என்னால் முடியும்’ என்று நினைத்தால், எல்லாம் முடியும் என்று எழுதியிருந்தேன். ‘நான் நினைத்தால் மட்டும் போதுமா; சூழ்நிலை ஒத்துழைக்க வேண்டுமே’ என்று நீங்கள் வாதாடலாம். வெளிப்புற காரணங்கள் நம் வாழ்க்கையை தொடர்ந்து பாதித்து வருகிறதே என்று பட்டியல்கள் அடுக்கலாம். இவ்வளவு ஏன், நாம் எங்கு பிறக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையில் பல விஷயங்களை தீர்மானிக்கிறது. பணக்காரக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை எந்த முயற்சியும் இல்லாமல் செல்வந்தர் ஆவது நிஜம் தான். அப்போது நம் முயற்சிகளில் என்ன பயன் என்ற கேள்வி வரலாம்.

அதே போல, சில கால சூழ்நிலைகள் சிலருக்கு சாதகமாக இருக்கும். தொண்ணுாறுகளின் துவக்கத்தில், உலகமயமாக்கம் ஏற்பட்டது. அப்போது திரை இசைக்கு புதிதாக வந்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அது பெரிதும் உதவியது. நம் இசையை மாநிலங்கள், தேசங்கள் என்று எடுத்துச் செல்ல முடிந்தது.அதே போல, நீங்கள் தொழில் துவங்கிய நேரம், அதை பாதிக்கும் வண்ணம் வரும் சட்ட திட்டங்கள் உங்களை பாதிக்கலாம்.கொரோனா வருவதற்கு முன், பிரமாதமாய் பெரிய அளவில் கடை அல்லது ஓட்டல் துவங்கியவர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள். புறச்சூழல் மாறியதால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

அதிர்ஷ்டம்
பலர் இதைத் தான், ‘நேரம், அதிர்ஷ்டம்’ என்று கூறுகின்றனர். நம் உழைப்பிற்கு சம்பந்தமே இல்லாது கிடைக்கும் பெரும் வெற்றிக்கோ அல்லது பெரும் தோல்விக்கோ புறச்சூழல்கள் காரணம் என்று பெரிதாக நம்புகிறோம். ‘நம்ம கையில ஒண்ணும் இல்லைங்க’ என்று சொல்பவர்கள், ஆன்மிகத் தெளிவோடு மனதை சம நிலையில் வைத்துக் கொண்டு இதைச் சொல்கின்றனரா அல்லது தோல்வியில் துவண்டு போய் இதைச் சொல்கின்றனரா என்பதை கவனியுங்கள்.


ரெடிமேட் காரணங்கள்
பல நேரங்களில் தோல்விக்கு காரணம் தேடத் தான் நாம் புறக் காரணங்களை தேடுகிறோம். தத்துவார்த்த ரீதியில் கூறியிருந்தால், நம் எல்லா வெற்றிகளும் புறக் காரணங்களால் தான் ஏற்பட்டது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், நம்மில் பலர் வெற்றியில் வியாக்கியானம் பேசுவதில்லை. தோல்விகளுக்கு ரெடிமேட் காரணங்கள் வைத்திருக்கிறோம். இந்த காரணங்கள் பெரும்பாலும் குறை கூறுதல்கள் தான். ‘என் அப்பா என்னை பிசினஸ் செய்ய விடலை, என் மனைவி அவ்வளவு சப்போர்ட் பண்ணலை, என் பார்ட்னர் ஏமாத்திட்டார், அந்த டைம் சரியில்ல எங்க பிசினஸ்க்கு...’ இவை எல்லாம் தப்பித்தல் எண்ணங்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவை நம்மை மலினப்படுத்தி, நம் சக்திகளை குறைத்து மதிப்பிட வைக்கிறது என்பதை உணருங்கள்.

கை மருந்து
இதை ஓர் எளிய உதாரணத்துடன் பார்க்கலாம். மழையில் நனைந்தவாறு வெளியே சென்று வந்ததால் சளி பிடித்தது என்று சொல்பவர்கள் இருக்கின்றனர். மழை மட்டுமே சளியை வரவழைத்து விட்டது என்று குற்றம் சொல்வது சரியா? மழை, சளிக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், மழையில் வெளியில் போகலாமா; வேண்டாமா என்ற தேர்வு நம்மிடம் உள்ளது. நனையாமல் இருக்க குடை கொண்டு போகலாம். மழை நமக்கு ஆகாதென்றால், உடனே அதற்கு மாற்று, வீட்டில் கை மருந்து எடுத்திருக்கலாம். இவை அனைத்தையும் விட, நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. பெய்த மழையில் லட்சக்கணக்கானவர்கள் நனைந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சளி பிடித்திருக்கிறதா? இல்லை தானே! அப்படி என்றால் சளி பிடிப்பதற்கு, நம் உடலின் தற்காப்பு சக்தி குறைவாக உள்ளது என்பது தான் நிஜக் காரணம்.

மழையை நிறுத்த முடியாது
மழையில் நனையாமல் குளிர் பதன பெட்டியில் வைத்திருந்த தயிரை உண்டிருந்தாலும் சளி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இப்போது உங்கள் எண்ணமும், செயல்பாடும் என்னவாக இருக்க வேண்டும்? நோய் தடுப்பு சக்தியை கூட்ட என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பது தான். மழையை குற்றம் சொல்வதால் பிரச்னை தீரப் போவதில்லை. மழை பல காரணங்களில் ஒன்று. முக்கியமாக, நம்மால் மழையை நிறுத்த வைக்க முடியாது. ஆனால், நம்மை திடப்படுத்திக் கொள்ள முடியும்.இதே உதாரணத்தை எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு மழை எல்லாருக்கும் சளியை அளிக்காதது போல, ஒரு சூழல் எல்லாரையும் ஒரே சம நிலையில் பாதிக்காது. அங்கு தான் தனிநபர் காரணிகள் பெரிதும் முக்கியமாகின்றன. அதனால் தான் மனித உழைப்பும், முனைப்பும் முக்கியமாகின்றன. நம் அறிவுபூர்வமான செயல்கள் புறச் சூழல்களை சரியாக கையாள உதவும்.

நம் தொழில் வெற்றி
பணக்காரர் வீட்டில் பிறக்கும் பிள்ளை, இறுதி வரை செல்வந்தராய் இருப்பது அவன் செயல்பாடுகளிலும் உள்ளன. எல்லா பூர்வீக சொத்துக்களையும் அழித்த எத்தனை பேரை பார்த்திருக்கிறோம்? அதே போல, காசில்லாத குடும்பத்தில் பிறந்து, பெரும் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் எத்தனை பேர்! எல்லா சூழலிலும் நிலைத்து தொழில் புரிபவர்கள் பலர் இருக்கின்றனர். கொரோனா தற்போதைய தொழிலை முடக்கலாம்; ஆனால், அதை தடுத்து, நாம் என்ன செய்கிறோம் என்பதில் தான் நம் தொழில் வெற்றி உள்ளது.

உங்களால் மட்டும் முடியும்
ரஹ்மானுடன், 90களில் இசை அமைக்க வந்த பலர், இன்று துறையிலேயே இல்லை. உலகமயமாக்கம் எல்லாருக்கும் கை கொடுத்தது. ஆனால் அதை புரிந்து செயல்பட்டு ஆஸ்கார் வரை சென்றது ரஹ்மான் மட்டும் தான்.உங்கள் நம்பிக்கையும், முயற்சியும் நிச்சயமான முதலீடுகள். புறச்சூழல்கள் சாதக பாதகங்களை ஏற்படுத்தலாம். ஆனால், உங்களை உச்சாணி கொம்பிற்கோ, அதலபாதாளத்திற்கோ கொண்டு செல்லும் சக்தி, வெளிப்புற காரணிகளுக்கு கிடையாது. அது நிச்சயமாக உங்கள் கையில் தான் உள்ளது. நம்புங்கள், உங்களால் மட்டும் தான் முடியும்!
– பணம் பெருகும்.
டாக்டர். ஆர்.கார்த்திகேயன்

கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)