பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்! பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்! ...  சூடு பிடிக்கும் விற்பனை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி சூடு பிடிக்கும் விற்பனை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி ...
முதலில் சட்டி நிரம்பட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
09:20

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சிறு, குறு தொழில்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. உண்மையில், இன்றைய கொரோனா காலகட்டத்தில், இன்னும் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவை என்ன?

இரண்டரை மாதங்களாக நாடெங்கும் ஊரடங்கு நிலவி வந்ததால், பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறவில்லை. பெரும்பாலான தொழில்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வர, ஒருசில தொழில்கள் முழுவதுமாக அபாய கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வரி வருவாய் 43 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக வெளிவந்துள்ள புள்ளிவிபரம் ஆச்சரியத்தைத் தரவில்லை.

மிகப்பெரிய சரிவு
மாதத்துக்கு, 1 லட்சத்து, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி., வரி வருவாய் திரட்ட வேண்டும் என்பது இலக்கு. கொரோனா செய்த களேபரத்தில், இதில் மிகப்பெரிய சரிவு. அதேசமயம், பல சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையான நிதி நெருக்கடியிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு உள்ளன. அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து இவை காத்திருக்கின்றன.இந்நிலையில், நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்கு, சமீபத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. உதாரணமாக, தாமதக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.அடுத்த காலாண்டில் கட்டப்பட வேண்டிய ஜி.எஸ்.டி., கட்டணத்துக்கான தேதி செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., வரி வருவாய் என்பது மத்திய, மாநில அரசு இயந்திரங்களுக்குப் போடப்படும் உயிர்த் திரவம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் சரிவு ஏற்படும்போது, நிச்சயம், மொத்த பட்ஜெட்டிலேயே நிதிப் பற்றாக்குறை ஏற்படும். பல்வேறு செலவுகளை மேற்கொள்ள முடியாமல், மத்திய அரசு திண்டாடும். வரியில் தமக்கான பங்கை எதிர்பார்த்திருக்கும் மாநில அரசுகளும் துவண்டு போய்விடும்.அதனால் தான், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை அல்லது எடுக்கப்பட வாய்ப்பில்லாத சூழல்.ஆனால், இதற்கு மாற்றுச் சிந்தனை ஒன்று இருக்கிறது. இன்றைய கொரோனா சூழலில், ஜி.எஸ்.டி., என்பது நல்லதொரு ஆயுதம். அதை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.உதாரணமாக, மக்களிடையே பொருட்களை வாங்குவதற்கான கிராக்கியை அதாவது டிமாண்டை உருவாக்க, ஜி.எஸ்.டி., வரிவிகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.விருந்தோம்பல், விமானத் துறை, மனை வணிகம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகள், கொரோனாவால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதேபோல் கடும் நெருக்கடியைச் சந்திக்கும், நுகர்பொருட்கள்,அடிப்படை பயன்பாட்டுப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை அடுத்த ஆறு மாதங்களுக்கு, 50 சதவீதமேனும் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஹரியானா துணை முதல்வரான துஷ்யந்த சவுதாலா, ஜவுளி, உரங்கள், காலணி மீதான ஜி.எஸ்.டி., வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

வேண்டுகோள்
ஆயுர்வேத தயாரிப்புகளின் மீது விதிக்கப்படும், 12 சதவீத வரி, 5 சதவீதமாக மாற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. பிஸ்கட், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் மீதான, 18 சதவீதவரியும் நன்கு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பை நுகர்பொருட்கள் துறை நிறுவனங்கள் முன்வைக்கின்றன. இன்றைக்கு மக்கள் கையில் போதுமான பணம் இருக்காது. அதனால், தங்கள் செலவுகளை இழுத்துப் பிடிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்களைத் துணிந்து வாங்க வைக்க வேண்டும் என்றால், விலைகள் குறைவாக இருக்கவேண்டும். இதற்கு, அரசாங்கத்தின் ஜி.எஸ்.டி., குறைவதே நல்லதொரு வழி என்பது துறைசார் நிபுணர்களின் கருத்து.ஆனால், ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. ஜி.எஸ்.டி.யையோ, மதிப்புக்கூட்டு வரியையோ குறைப்பதனாலேயே பொருளாதாரம் தலைநிமிரும் என்பதற்கான உத்தரவாதம் எந்த நாட்டில் இருந்தும் நமக்குக் கிடைக்கவில்லை.ஒரு சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த பொருட்களுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்சலுகைகள் வழங்கப்படுமானால்,


அது பயனுடையதாக இருக்கும் என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது. உதாரணமாக, ஆடம்பரப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியைத் தற்போது குறைப்பது எந்தப் பயனையும் தராது. மக்களே, அந்தப் பக்கம் போகமாட்டார்கள். ஆனால், அன்றாட வாழ்வுக்கான அடிப்படைப் பொருட்களின் மீதான வரிக் குறைப்பு நிச்சயம் பயன் தரும். இதற்கு, தற்போது இருக்கும்,நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை, இரண்டு அடுக்காகக் குறைப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். இதன்மூலம் பல பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புண்டு. இது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.தொழில்துறையினர் மத்தியில், ஜி.எஸ்.டி., பற்றி வேறு கோரிக்கைகள் உள்ளன. இப்போது இன்வாய்ஸ் எழுப்பப்பட்டாலே, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

உதாரணமாக, ஒரு பொருளையோ, சேவையையோ வழங்கிவிட்டு, அந்த மாதத்திலேயே அதற்கான தொகை வந்து சேரவில்லை என்றாலும், அடுத்த மாதம், 20ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். இன்றைய கொரோனா காலத்தில் பல இடங்களில் இருந்து பணமே வருவதில்லை; தாமதம் ஆகிறது என்பதுதான் யதார்த்தம்.ஒரு பக்கம் பொருளையும் கொடுத்துவிட்டு, அதற்கான தொகையையும் வசூலிக்க முடியாமல், மற்றொரு புறம், அந்த விற்பனைக்கான, ஜி.எஸ்.டி.,யையும் செலுத்துவது என்பது இரட்டை மண்டையிடி என்று கருதுகின்றனர், தொழில்துறையினர். மேலும், உரிய தேதிக்குள், ஜி.எஸ்.டி. கட்டவில்லை என்றால், 18 சதவீத வட்டி வேறு செலுத்த வேண்டும். இதற்கு மாறாக, பணம் கைக்கு வந்த பின், ஜி.எஸ்.டி., தொகையைச் செலுத்தும் விதமாக, வரித் திருத்தம் வேண்டும் என்று கோருகின்றனர்.

ஜி.எஸ்.டி., வருவாய் பெருகும்
தொழில்துறையினர் திரட்டிய ஜி.எஸ்.டி., தொகையில் ஒரு பகுதியை, அவர்களுக்கே ஒரு கடனாக வழங்கினால் என்ன என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. உதாரணமாக, வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, அந்தந்த நிறுவனங்களே, 18 முதல், 24 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளட்டும். அதை அவர்களது தொழிலில் மறுமுதலீடு செய்யட்டும். அந்தத் தொகையை இரண்டு ஆண்டுகள் கழித்து, வட்டியோடு, மாதாந்திர இ.எம்.ஐ.,யாகச் செலுத்த அனுமதிக்கலாமே என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.எண்ணற்ற நிறுவனங்கள் நேர்மையாக, உரிய காலத்துக்குள் ஜி.எஸ்.டி., வரியைச் செலுத்தி வருகின்றன. அவர்களது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்.


அதற்கு ஏற்ப அவர்களுக்கு, ‘ரிவார்டு பாயின்டு'கள் முறை அறிமுகம் செய்யப்பட்டு, ‘ரீபண்டு' கிடைப்பதில் முன்னுரிமை, தனியான தொடர்பு அதிகாரி, கிரெடிட் ரிவர்சல் செய்வதற்கு, 180 நாட்களுக்கு மேல் உச்சவரம்பு உயர்த்தப்படுதல் ஆகியவை வழங்கப்படலாம். தேசிய வங்கிகளில் கடன் கோரும்போது, சிறப்பு சலுகைகளும் வழங்கப்படலாம்.மேலும், பெட்ரோல், டீசல், மது விற்பனையையும் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவதைப் பற்றி மாநில அரசுகளோடு கலந்துபேசி, மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கலாம். இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையே வேறு. அதாவது, ஜி.எஸ்.டி., செலுத்துவதில் மெத்தனம், அதன் வலை தளம் அவ்வப்போது பழுதாகிவிடுகிறது, படிவங்களை நிரப்புவதில் தெளிவின்மை என்பதெல்லாம் கடந்த காலம்.
அப்போது வர்த்தகம் நடந்துகொண்டிருந்தது. கடந்த இரண்டரை மாதங்கள் அது இல்லை. இப்போது தான் படிப்படியாக கடைகள் திறக்கத் துவங்கியுள்ளன. உற்பத்தி ஆரம்பித்திருக்கிறது. சட்டியில் இனிமேல் தான் பணம் வந்து நிரம்ப வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்களையும், சேவைகளையும் அதிக அளவில் வாங்கவும், நுகரவும் தொடங்குபோது தான், மொத்த வருவாய் பெருகும். அப்போது, அதில் இருந்து திரட்டப்படும் ஜி.எஸ்.டி., வரி வருவாயும் பெருகும். சட்டியிலேயே போதுமான அளவு சேகரமாகாத போது, அகப்பையில் என்ன திரட்டி எடுத்துவிட முடியும்? சுரண்டித்தான் எடுக்க முடியும்!இன்றைய தேவை, சட்டியைக் கழுவிக் கொடுப்பது மட்டுமல்ல; அதை நிரப்புவதும் தான். மத்திய, மாநில அரசுகள் அதற்கு உதவவேண்டும் என்பதே தொழில் துறையினரின் வேண்டுகோள்.

ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)