பதிவு செய்த நாள்
23 ஜூன்2020
08:33
ஐபோன் எஸ்இ (2020) ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியாகி விற்பனையில் களைகட்டிய ஐபோன் எஸ்இ-யின் அடுத்த கட்ட தயாரிப்பு ஐபோன் எஸ்இ-2. இறக்குமதி வரியைக் குறைக்க ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலேயே ஐபோன்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
சீனாவில் உள்ள ஆப்பிள் சப்ளையர்களை ஐபோன் எஸ்இ உதிரி பாகங்களை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன் எஸ்இ-ன் விலை ரூ. 42,500. (558 டாலர்கள்). அமெரிக்காவின் விலையைவிட இந்தியாவில் ரூ.15 ஆயிரம் அதிகம்.
கடந்த ஏப்., மாதம் ஐபோன் எஸ்இ குறித்து ஆப்பிள் தகவல் வெளியிட்டது. 30-40 ஆயிரம் விலையில் உள்ள சீன ஸ்மார்ட் போன்களான ஒன்பிளஸ், போகோ, விவோ உள்ளிட்ட போன்களின் போட்டியை சமாளிக்க ஐபோன் எஸ்இ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவில் இருந்து எஸ்இ மாடலின் புளூ பிரிண்ட் மட்டுமே சீனாவுக்கு வரும். ஆப்பிள் போன்களில் பெரும்பாலானவை சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. தற்போது இந்தியாவில் டில்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் ஆப்பிள் போன்களின் விலை மேலும் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|