இந்திய ஜவுளிக்கு ஜப்பானில் வாய்ப்பு இந்திய ஜவுளிக்கு ஜப்பானில் வாய்ப்பு ...  அன்னிய செலாவணி இருப்பு சரிவு அன்னிய செலாவணி இருப்பு சரிவு ...
அச்சத்தில் சில்லரை விற்பனை கடைகள் சரி செய்யும் முயற்சியில் சீன நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
22:36

புதுடில்லி:சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான, ‘சயோமி’ அதன் சில்லரை விற்பனை கடைகளின் விளம்பரப் பலகைகளில், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ எனும் வாசகத்தை இடம் பெறச் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

எல்லை பிரச்னை காரணமாக, இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, சீன பொருட்களை புறக்கணிக்கும் மனநிலை, நாட்டில் அதிகரித்து வருகிறது.


காழ்ப்புணர்ச்சி

இந்நிலையில், சில்லரை விற்பனை கடைகள் மீது, சிலர் காழ்ப்புணர்ச்சியைக் காட்டக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, சயோமி நிறுவனம், இத்தகைய முயற்சியை மேற்கொண்டு இருப்பதாக, அகில இந்திய மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஏ.ஐ.எம்.ஆர்.ஏ., தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர் அரவிந்த் குரானா மேலும் கூறியதாவது:சில இடங்களில்,சில்லரை விற்பனை கடைகளில் நுழைந்து, கடைகளை தாக்கி விடுவோம் என்றும், சீனப் பொருட்களை அகற்றி விடுமாறும் சிலர் மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால், சில்லரை விற்பனையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சில்லரை விற்பனை கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பது குறித்து, சீன பிராண்டு நிறுவனங்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.


எங்கள் கடிதத்தில், சில்லரை விற்பனையாளர்கள் சிறிது காலத்துக்கு பிராண்டு விளம்பர பலகையை மூடி வைக்கவோ அல்லது கழற்றி விடவோ அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளோம்.இந்நிலையில், சயோமி நிறுவனம், கடை விளம்பர பலகைகளில், பிராண்டு பெயருக்கு கீழே, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற வாசகத்தை, வெள்ளை வண்ணத்தில் இடம் பெறச் செய்யும் முயற்சியை துவக்கி உள்ளது.

மற்ற நிறுவனங்கள் இது குறித்து இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், அவை நிலைமையைஉன்னிப்பாக கவனித்து வருகின்றன.

கூடுதல் ஆதரவு

வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, சீன தயாரிப்புகளுக்குப் பதிலாக, வேறு பிராண்டுகளை காட்டச் சொல்கின்றனர். இதனால், ‘சாம்சங்’ நிறுவனம் பயனடைகிறது. சீன பிராண்டு அல்லாத பெரிய பிராண்டு இது ஒன்று தான். சீன அரசு, அந்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவைவழங்குவதை போல, இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிப்பதில், அரசு இன்னும் அதிக கவனம் எடுத்து, கூடுதல் ஆதரவை வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்
business news
புது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்
business news
மும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்
business news
புது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்
business news
இன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Muraleedharan.M - Chennai,India
27-ஜூன்-202009:06:59 IST Report Abuse
Muraleedharan.M செத்தாலும் இந்திய அரசியல் வாதிகள், அதிகாரிகள் செய்ய விடமாட்டாகள். இவர்கள் திருந்தமாட்டார்கள். சீனாவிற்கு அனுப்பி இவர்களுக்கு டிரென்யினிங் தரணுயம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)