அச்சத்தில் சில்லரை விற்பனை கடைகள் சரி செய்யும் முயற்சியில் சீன நிறுவனங்கள் அச்சத்தில் சில்லரை விற்பனை கடைகள் சரி செய்யும் முயற்சியில் சீன ... ...  இனி விளம்பரம் கிடையாது தவிக்கும், ‘பேஸ்புக், டுவிட்டர்!’ இனி விளம்பரம் கிடையாது தவிக்கும், ‘பேஸ்புக், டுவிட்டர்!’ ...
அன்னிய செலாவணி இருப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2020
21:50

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 50 ஆயிரத்து, 557 கோடியாக சரிவைக் கண்டுள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இது, இந்திய மதிப்பில், 38.17 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மேலும், கடந்த வாரம் இந்திய வரலாற்றில் அதுவரை இல்லாத மிக அதிக உயர்வாக, 50 ஆயிரத்து, 764 கோடி டாலராக இருந்த நிலையில், மதிப்பீட்டு வாரத்தில், இருப்பு சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:

கடந்த, ஏப்ரல், 24ம் தேதிக்குப் பிறகு, முதன் முறையாக, அன்னிய செலாவணி இருப்பு சரிவை கண்டுள்ளது. கடந்த, ஏப்ரல், 24 மற்றும், ஜூன், 12ம் தேதிக்கு இடையே, அன்னிய செலாவணி இருப்பு, 2,818 கோடி டாலர் அதிகரித்திருந்தது. கடந்த, ஜூன், 5ம் தேதியன்று, முதன் முறையாக, இருப்பு, அரை லட்சம் கோடி டாலரை தாண்டி சாதனை படைத்தது. அந்த வாரத்தில், இருப்பு, 823.3 கோடி டாலர் அதிகரித்து, 50 ஆயிரத்து, 170 கோடி டாலராக உயர்ந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு சரிவைக் கண்ட காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு சரிந்துள்ளது. அன்னிய பண மதிப்பு, மதிப்பீடு வாரத்தில், 169.8 கோடி டாலர் குறைந்து, 46 ஆயிரத்து, 704 கோடி டாலராக சரிந்துள்ளது.மேலும் , தங்கத்தின் இருப்பு மதிப்பும், 35.8 கோடி டாலர் குறைந்து, 3,282 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.48 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 ... மேலும்
business news
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)