தேவையற்றதை நீக்கினால் தேவையானது வரும்! தேவையற்றதை நீக்கினால் தேவையானது வரும்! ... ஏற்றுமதி, இறக்குமதிக்கு ‘டிஜிட்டல்’ தள சேவை ஏற்றுமதி, இறக்குமதிக்கு ‘டிஜிட்டல்’ தள சேவை ...
திடக் கழிவு மேலாண்மை ‘சிப்காட்’டில் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2020
22:35

சென்னை:‘சிப்­காட்’ தொழில் பூங்­காக்­களில் சேரும் திடக் கழி­வு­களை கையாள, பூங்கா வளா­கத்­திற்­குள், 3 முதல், 5 ஏக்­கர் நிலத்தை, ‘சிப்­காட்’ நிர்­வா­கம் ஒதுக்கி உள்­ளது.

தமி­ழக அர­சின், ‘சிப்­காட்’ எனும் தமிழ்­நாடு தொழில் முன்­னேற்ற நிறு­வ­னத்­தி­டம் பெறும் நிலத்­தில், பெரு நிறு­வ­னங்­கள் தொழில் துவங்­கு­கின்­றன. காஞ்­சி­பு­ரம், துாத்துக்­குடி, உட்­பட, பல்­வேறு மாவட்­டங்­களில், 19 தொழில் பூங்­காக்­கள் அமைந்­துள்­ளன. இந்த தொழில்
பூங்­காக்­களில், சேக­ர­மா­கும் திடக் கழி­வு­களை கையாள, தொழில் பூங்­காக்­க­ளுக்­குள், குப்பை கிடங்கு துவங்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, ‘சிப்­காட்’ அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:

சிப்­காட் தொழில் பூங்­காக்­களை பரா­ம­ரிக்க, ஒப்­பந்த தொழி­லா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட்டு பணி­கள் நடந்து வரு­கின்­றன. இவர்­கள், சாலை மற்­றும் மின் விளக்­கு­கள் பரா­ம­ரிப்பு மேற்­கொள்­வர்.
ஆனால், குப்பை அகற்­று­வது தொடர்­பாக, ஒரு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட திட்­டம் இல்­லா­மல்
இருந்­தது. இது தொடர்­பாக, தொழிற்­சா­லை­கள் மற்­றும் சிப்­காட் நிர்­வா­கம் இடையே ஒரு குழப்­பம் இருந்­தது.

இத­னால், பூங்­காக்­களில் ஆங்­காங்கே குப்பை கழி­வு­கள் நிறைந்து காணப்­பட்­டன.பல்­வேறு பூங்­காக்­கள் பஞ்­சா­யத்­து­களில் உள்­ளன. இத­னால், பூங்­காக்­க­ளி­லி­ருந்து குப்­பையை
அகற்­று­வ­தில், சிர­மம் இருந்­தது. தற்­போது பூங்­காக்­களில், குப்­பையை கொட்­டு­வ­தற்­காக,
3 முதல், 5 ஏக்­கர் நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.தின­மும், குறிப்­பிட்ட துாரம் உள்ள குப்­பையை அகற்றி, குப்பை கிடங்­கில் கொட்­டப்­படும். இதற்­காக ஆட்­கள் நிய­மிக்­கப்­பட்­டு உள்­ள­னர்.

இந்த குப்பை கிடங்­கில், மக்­கும் குப்பை, மக்­காத குப்பை, தொழிற்­சாலை குப்பை என, தரம் பிரித்து கொட்­டப்­படும். டன் கணக்­கில் குப்பை சேர்ந்த பின், இதி­லி­ருந்து இயற்கை உரம் தயா­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும்.இந்த உரங்­கள், பூங்­காக்­களில்
வளர்க்­கும் மரங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும். இதற்­காக ஆகும் செலவு,தொழிற்­சா­லைக­ளி­ல் இ­ருந்து வசூ­லிக்­கப்­படும்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்
business news
புது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்
business news
மும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்
business news
புது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்
business news
இன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)