மே மாதத்தில் பணவீக்கம் சரிவுமே மாதத்தில் பணவீக்கம் சரிவு ... சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி ...
சீனாவுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகள் செயலிகளை தொடர்ந்து, ‘ஏசி, டிவி’களுக்கு தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2020
23:01

புது­டில்லி:சீனா­வின், 59 செய­லி­களை தடை செய்­தி­ருக்­கும் நிலை­யில், அடுத்­த­கட்­ட­மாக, ‘டிவி, ஏர் கண்­டி­ஷ­னர்’ உள்­ளிட்ட, 12 பொருட்­க­ளின் இறக்­கு­ம­தியை குறைப்­பது குறித்த
நட­வ­டிக்­கை­யில், அரசு தீவி­ர­மாக இறங்கி உள்­ளது.


குறிப்­பாக, ஏர் கண்­டி­ஷ­னர் மற்­றும் அதன் பாகங்­களை இறக்­கு­மதி செய்­வ­தில் கட்­டுப்­பா­டு­களை கொண்டு வரு­வ­தன் மூலம், உள்­நாட்­டில், 1 டஜன் பொருட்­க­ளின் உற்­பத்­தியை
அதி­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்டு வரு­கிறது.சுங்க வரி அதி­க­ரிப்பு மற்­றும் தொழில்­நுட்ப தர
கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிப்­பது உள்­ளிட்ட பல வழி­களில், இறக்­கு­ம­தியை ஒழுங்­கு­ப­டுத்த
திட்­ட­மி­டப்­ப­டு­கிறது.மேலும், நிய­மிக்­கப்­பட்ட துறை­மு­கங்­க­ளி­லி­ருந்து மட்­டுமே, குறிப்­பிட்ட பொருட்­களை இறக்­கு­மதி செய்ய உரி­மம் வழங்­கு­வது மற்­றும் அனு­ம­திப்­பது பற்­றி­யும்
விவா­திக்­கப்­ப­டு­கிறது.

இது குறித்து, சில மாதங்­க­ளுக்கு முன்பே சில நட­வ­டிக்­கை­கள் துவங்கி விட்­டன. அகர்­பத்தி, டயர், பாமா­யில் உள்­ளிட்­ட­வற்றை இறக்­கு­மதி செய்­வ­தில் சில கட்­டுப்­பா­டு­களை அரசு கொண்டு வந்­துள்­ளது.இறக்­கு­ம­தியை குறைப்­ப­தற்கு ஏது­வாக, உள்­நாட்டு பொருட்­கள்
தயா­ரிப்பை ஊக்­கு­விப்­பது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது.சுங்க வரியை அதி­க­ரிப்­பது, இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்­கான தரக் கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிப்­பது, குறிப்­பிட்ட பொருட்­களை அதற்கு ஒதுக்­கப்­படும் துறை­மு­கங்­கள் வழி­யாக மட்­டுமே இறக்­கு­மதி செய்­வ­தற்கு உரி­ம­மும் அனு­ம­தி­யும் வழங்­கு­வது என, பல நட­வ­டிக்­கை­களை எடுக்க திட்­ட­மி­டப்­பட்டு வரு­கிறது.

ஏர் கண்­டி­ஷ­னர், ‘டிவி’ மட்­டு­மின்றி, உருக்கு, அலு­மி­னி­யம், கால­ணி­கள், விளை­யாட்டு பொருட்­கள், லித்­தி­யம் அயான் பேட்­ட­ரி­கள், விளை­யாட்டு பொருட்­கள் என பல்­வேறு
பொருட்­கள், வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை­யி­ன­ரால் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளது. இந்த பொருட்­க­ளுக்­கான இறக்­கு­ம­தி­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரித்து, உள்­நாட்டு
உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு ஊக்­கச் சலு­கை­கள் வழங்­கு­வது குறித்து ஆலோ­சனை நடை­பெற்று வரு­கிறது.

குறிப்­பாக, ஏர்­ கண்­டி­ஷ­னர் மற்­றும் அதன் பாகங்­களை இறக்­கு­மதி செய்­வ­தில் அதிக
கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.நாட்­டில், ‘அசெம்­பிள்’ செய்­யப்­படும் ஏர் கண்­டி­ஷ­ன­ரில் பயன்­ப­டுத்­தப்­படும், ‘கம்­ப­ர­ஸர்’களில், 90 சத­வீ­தம், சீனா மற்­றும்
தாய்­லாந்­தி­லி­ருந்து இறக்­கு­மதி ஆகிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

‘ஸ்டார்ட் அப்’களில் சீன முத­லீடு: விசா­ரணை நடத்த கோரிக்கை

இந்­திய, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில், சீன நிறு­வ­னங்­கள் செய்­தி­ருக்­கும் முத­லீ­டு­கள் குறித்து, விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என, அகில இந்­திய வர்த்­த­கர்­கள் கூட்­ட­மைப்­பான, சி.ஏ.ஐ.டி., கேட்­டுக் கொண்­டுஉள்­ளது.

இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு ஸ்டார்ட் அப்­களில், சீன நிறு­வ­னங்­கள் முத­லீ­டு­கள் செய்­து இருக்­கும் நிலை­யில், நம் நாட்டு தர­வு­கள், சீன முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பது குறித்த அச்­சம் இருப்­ப­தா­க­வும், சி.ஏ.ஐ.டி., தெரி­வித்­துள்­ளது.மேலும், இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­சர், வர்த்­த­கத் துறை அமைச்­சர், தக­வல் தொழில்­நுட்­ப துறை அமைச்­சர் ஆகி­யோ­ருக்கு கடி­தம் எழுதி உள்­ளது.


சி.ஏ.ஐ.டி.,யின் செக­ரட்­டரி ஜென­ரல் பிர­வீன் கந்­தன்­வால் கூறி­ய­தா­வது:சீன முத­லீட்­டா­ளர்­கள், இந்­திய ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­தி­ருக்­கும் நிலை­யில், ஸ்டார்ட்அப்­க­ளால் சேக­ரிக்­கப்­பட்ட தர­வு­கள், சீன முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மல் இருப்­ப­தை­யும்,
நாட்­டின் பாது­காப்­புக்கு எந்த அச்­சு­றுத்­த­லும் இல்லை என்­பதை உறுதி செய்­ய­வும், சீன
முத­லீ­டு­கள் குறித்து விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டு­மாறு, அரசை கேட்­டுக் கொண்­டுஉள்­ளோம்.
இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்

சீன நிறு­வ­னங்­கள், ‘பிளிப்­கார்ட், பேடி­எம் மால், பேடி­எம் டாட் காம்., ஸ்விகி, ஓலா, ஓயோ, பாலி­சி­ப­ஜார், பிக்­பாஸ்­கெட், ஸ்நாப்­டீல், மேக்­மை­டி­ரிப், லென்ஸ்­கார்ட் டாட் காம்’ என, பல ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­களை செய்­துள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)