ஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம்ஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம் ... வளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் வளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிதாக 16 நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
22:43

புது­டில்லி:கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், எல்.ஐ.சி., நிறு­வ­னம், புதி­தாக, 16 நிறு­வன பங்­கு­களில் முத­லீடு செய்­துள்­ளது.

கொரோனா பர­வல் அதி­க­ரித்த நிலை­யில், எல்.ஐ.சி., நிறு­வ­னம் மிகச் சரி­யான முத­லீட்டு முடி­வு­களை எடுத்­துள்­ள­தாக, பங்­குச் சந்தைநிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.இக்­கா­ல­கட்­டத்­தில், சந்தை சரிந்­த­போது, மிகக் குறைந்த விலை­யில், புதிய பங்­கு­களில் முத­லீட்டை
மேற்­கொண்­டுள்­ளது, எல்.ஐ.சி., நிறு­வ­னம். பொது­வா­கவே, மார்ச் மாதத்­தில் அதி­க­ள­வி­லான பிரீ­மிய வசூல் மற்­றும் பாலிசி விற்­ப­னை­கள் இருக்­கும்.

இது நிறு­வ­னத்­துக்கு மிக­வும் வச­தி­யாகி விட்­டது. இத­னால், அதி­க­ள­வில் முத­லீ­டு­களை
மேற்­கொள்ள முடிந்­துள்­ளது.கடந்த, 2008ம் ஆண்­டுக்­குப் பிறகு, சந்­தை­யில் மிக அதி­க­ள­வி­லான ஏற்ற, இறக்­கங்­கள், நடப்­பாண்டு மார்ச் மாதத்­தில் தான் இருந்­தது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, சந்தை சரி­வில் இருந்த நிலை­யில், பல முத­லீ­டு­களை, எல்.ஐ.சி.,
மேற்­கொண்­டி­ருக்­கிறது.

எச்.சி.எல்., டெக்­னா­ல­ஜிஸ், ஹிந்­துஸ்­தான் யுனி­லீ­வர், மகா­ந­கர் கியாஸ், அமர ராஜா
பேட்­ட­ரீஸ், இண்­டஸ்­இண்ட் பேங்க், பிர்லா டயர்ஸ், டாடா கன்ஸ்­யூ­மர் புரா­டெக்ட்ஸ் உள்­ளிட்ட, 16 நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.மேலும், ஏற்­க­னவே கைவ­சம் இருக்­கும் பங்­கு­களில், 43 பங்­கு­களில், தற்­போது இருக்­கும் முத­லீட்டை அதி­க­ரித்­துள்­ளது.மார்ச் மாத நில­வ­ரப்­படி, எல்.ஐ.சி., நிறு­வ­னம், மொத்­தம், 326 நிறு­வ­னங்­களில் பங்குமுத­லீட்டை மேற்­கொண்­டி­ருக்­கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)