பதிவு செய்த நாள்
03 ஜூலை2020
22:48
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனத்தில், தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.‘பேஸ்புக்’ நிறுவனம் ஆரம்பித்து வைத்த முதலீட்டு முதல் அடி, இப்போது, ‘இன்டெல்’ வரை நீண்டுள்ளது.
‘எலக்ட்ரானிக் சிப்’ தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘இன்டெல்’ நிறுவனத்தின் முதலீட்டு துணை நிறுவனமான, ‘இன்டெல் கேப்பிட்டல்’, ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தின், 0.39 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த, 0.39 சதவீத பங்குகளை, 1,894.50 கோடி ரூபாய்க்கு, ‘இன்டெல்’ வாங்குகிறது.இதனையடுத்து, இதுவரை, ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகளின் மதிப்பு, 1.18 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளது.
‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனம், முழுக்க முழுக்க, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.‘
இன்டெல்’ முதலீடு குறித்து, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளதாவது:நமது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் மேம்படுத்துவதற்கும், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களின் திறன்களை மேம்படுத்த ‘இன்டெல்’ உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடு குறித்து ‘இன்டெல் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் தலைவர் வெண்டெல் புரூக்ஸ் கூறியதாவது: இந்த முதலீட்டின் மூலம், இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதில், ‘இன்டெல்’ ஒரு முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜியோவில் இதுவரை முதலீடுகள்:வ.எண். முதலீட்டாளர் முதலீட்டு தொகை(ரூபாய் கோடிகளில்) பங்கு (சதவீதத்தில்)
1. பேஸ்புக் 43,573.62 9.99%
2. சில்வர் லேக் 5,655.75 1.15%
3.விஸ்ட்டா ஈக்விட்டி 11,367.00 2.32%
4.ஜெனரல் அட்லாண்டிக் 6,598.38 1.34%
5. கே.கே.ஆர்., 11,367.00 2.32%
6. முபதாலா 9,093.60 1.85%
7..சில்வர் லேக் 4,546.80 0.93%
8. ஏ.டி.ஐ.ஏ. 5,683.50 1.16%
9. டி.பி.ஜி., 4,546.80 0.93%
10. எல் கேட்டர்டான் 1,894.50 0.39%
11. பி.ஐ.எப்., 11,367.00 2.32%
12.இன்டெல் 1,894.50 0.39%
மொத்தம் 1,17,588.45 25.09%
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|