பதிவு செய்த நாள்
04 ஜூலை2020
17:20

போக்ஸ்வேகன் நிறுவனம் தனது தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படும் கார்களின் வடிவம் மற்றும் செயல் திறனை சோதிக்க ஆப்டிகல் இமேஜ் சென்சிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் அந்த நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு கார்களின் தரம் சோதனை படுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக கார்களில் கோளாறுகள் நுட்பமாக கண்காணிக்கப்பட்டு சரிசெய்யப்படும்.
இந்த வேலையைச் செய்ய பெர்லின், மூனீச் உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொழில்நுட்ப விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டெஸ்லா உள்ளிட்ட கார் நிறுவனங்கள் கார்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சி செய்துவருகின்றன. ஆனால் கார் தயாரிப்பு தொழில் பாக்ஸ்கான் நிறுவனம் முதன்முறையாக தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக கார்களின் இறுதி வடிவத்தை இயந்திரங்களை சோதிக்கும். ஆனால் துல்லியமாக காரின் வடிவத்தையும் அதன் தொழில்நுட்பத்தையும் இயந்திரங்களால் சோதிக்க இயலாது. இதற்கு மாற்றாக தற்போது ஆப்டிகல் சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு யூனிட்டில் நூறு கார்கள் தயாரிக்கப்படுகின்றன என வைத்துக்கொண்டால் அத்தனையும் ஒன்றுபோலவே தரத்துடன் வெளியாகும். இதனால் சந்தையில் விற்கப்படும் போக்ஸ்வேகன் கார்களின் தரம் மற்றும் ஒழுங்கு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|