பதிவு செய்த நாள்
04 ஜூலை2020
22:32

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த ஜூன் மாதம், 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 127 கோடி டாலர் அதிகரித்து, 50 ஆயிரத்து, 684 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இது இந்திய மதிப்பில் 38.17 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது ஜூன், 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இருப்பு, 15 ஆயிரத்து 704 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்து, சரிவைக் கண்டது.கடந்த ஜூன், 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி இருப்பானது, அரை லட்சம் கோடி டாலர் என்ற நிலையை முதல் முறையாக தாண்டியது.
அதாவது, 50 ஆயிரத்து, 170 கோடி டாலர் என்ற நிலையை எட்டியது. அதன் பிறகு கடந்த ஜூன், 12ம் தேதியன்று, இதுவரை காணாத உயரத்தை அதாவது, 50 ஆயிரத்து, 764 கோடி டாலர் என்ற உயரத்தை எட்டியது.மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 56.5 கோடி டாலர் அதிகரித்து, 46 ஆயிரத்து, 760 கோடி டாலராக உயர்ந்துஉள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 70.7 கோடி டாலர் அதிகரித்து, 3,352 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.53 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|