தொடர் சரிவில் தங்கம் இறக்குமதி தொடர் சரிவில் தங்கம் இறக்குமதி ...  என்.பி.எஸ்., கணக்கு துவக்க புதிய வழி என்.பி.எஸ்., கணக்கு துவக்க புதிய வழி ...
அன்னை அழைக்கிறாள்... செல்வோம் வாருங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
22:07

கொரோனா காலத்தில், ‘திடீர் டார்லிங்’ துறையாக மாறியிருப்பது வேளாண்மை. மற்ற துறைகளில் பெரிய முன்னேற்றமில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன், அனைவரது கவனத்தையும் வேளாண்மை ஈர்த்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

கடந்த சனிக்கிழமை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பணிகளை ஆய்வு செய்த பிரதமர், முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.ஊக்கப்படுத்த வேண்டும்‘வேளாண் துறையில், ‘இனம் காணப்பட்டுள்ள பிரச்னை’களைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கு, ஆண்டுக்கு இருமுறை போட்டிகளை நடத்த வேண்டும். ‘இதில், ‘ஸ்டார்ட் அப்’ மற்றும் வேளாண் தொழில்முனைவோர் பங்கெடுத்து, சரியான தீர்வுகளை வழங்க ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்து வரும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும், ‘புரோக்கரேஜ்’களும் கூட, இந்திய வேளாண் துறையின், ‘பச்சை பசேல்’ எதிர்காலத்தை, வார்த்தைகளில் தேன் தடவிச் சொல்லியபடி இருக்கின்றனர். ‘நல்ல மழை பெய்கிறது. விவசாயத் தேவைக்குத் தண்ணீர் பஞ்சமே இருக்காது’ என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

புள்ளி விபரங்கள்

இன்னொரு பக்கம், இந்தக் கொரோனா காலத்திலும், டிராக்டர் விற்பனையும் உரத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்ற புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஜனவரி -– மார்ச் 2020, நான்காம் காலாண்டில், வேளாண்மைத் துறை, 5.9 சதவீதம் வளர்ந்திருப்பது, மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

‘கிரிசில்’ என்கிற சந்தை ஆய்வு நிறுவனம், 2020 – -21 நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மைனசில் இருக்கும்; ஆனால், வேளாண்மை மட்டும், 2.5 சதவீத அளவுக்கு வளர்ந்திருக்கும் என்று, நம்பிக்கை கணிப்பை வெளியிட்டு உள்ளது.

புதிய மவுசு

இதையெல்லாம் பார்க்கும்போது, பழைய ஹீரோயினுக்குப் புதிய மவுசு கிடைத்திருப்பதாக சொல்வதா அல்லது நம் பாராமுகத்தையும் புறக்கணிப்பையும் மீறி, மக்கள் பசியாற்றும் பணியைச் செவ்வனே செய்து வரும் அன்னை வயலையும், தன்னலமற்ற விவசாயியையும் வாயார வாழ்த்துவதா!

கடந்த, 70 ஆண்டுகளாக நாம், விவசாயத்துக்கு என்ன செய்தோம்? இந்தியாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில், 55 சதவீதம் பருவ மழையையே நம்பியிருப்பதாக, ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. அதுவும் ஒரு சில மாநிலங்களில், வெள்ளம் வந்து பாதிப்பை ஏற்படுத்தும். அல்லது மழையே இல்லாமல் பாடாய் படுத்தும்.இதில் முறையான பாசன வசதி என்பதற்கான வழிமுறையை என்ன கண்டிருக்கிறோம்?

தமிழகம் போன்ற மாநிலங்களில், முறையான பாசன வசதி இருப்பதால், கூடுதல் பரப்பளவில் பயிர் செய்ய முடிகிறது. ஆனால், பல மாநிலங்களில், 30 முதல் 35 சதவீத விவசாய நிலங்களுக்கே நீர்ப்பாசன வசதி இருக்கிறது.

அதாவது, நிலமிருந்தும் தண்ணீர் இல்லை. தண்ணீரை ஒழுங்குபடுத்தித் தரும் திட்டங்கள் இல்லை; போதுமான நீர்த்தேக்கங்கள் இல்லை; கடைமடை பகுதி வரை போய்ச் சேருவதற்கான கால்வாய்கள் துார் வாரப்படவில்லை. நிலத்தடி நீரை எடுப்பது இன்னொரு பெரிய பிரச்னை. ஒன்று கூடுதலாக எடுத்து, கபளீகரம் செய்யப்படுகிறது. அதனால், குடிநீருக்கே பஞ்சம் வந்துவிடுகிறது. இதில் விவசாயத்துக்கு எங்கே தண்ணீர் கிடைக்கப் போகிறது?

திட்டங்கள் இல்லை

எந்த இடத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெற்பயிரை விதைப்பது, எங்கே பணப் பயிர்களை ஊக்குவிப்பது என்பதற்கான எந்த திட்டமும், பெரிய அளவில் நடைமுறைப் படுத்தப் படவில்லை.அதாவது, வாய்ப்பு வழங்க, நிலம் காத்திருக்கிறது. ‘என்னிடம் பயிர் செய்து பயன் பெறு’ என்கிறது. ஆனால், அதற்கான திட்டங்கள் போதுமான அளவு இல்லை.

அரசியல் மயமான இடம்

அடுத்த கட்டம், பயிர்களை சந்தைப்படுத்துதல். இத்தனை ஆண்டுகளாக, உள்ளூர் மண்டிகளில் தான் போய் வியாபாரம் செய்ய முடியும். அது முற்றிலும் அரசியல்மயமான இடம். அங்கே எப்படி விலை நிர்ணயமாகிறது என்பது, உண்மையில் பெரிய கேள்விக்குறி. விவசாயிகள் சம்பாதிப்பதை விட, இடைத்தரகர்களும், வணிகர்களுமே கூடுதல் லாபம் ஈட்டினர்.

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்தங்களின் மூலம், விவசாயிகள், எங்கே வேண்டுமானாலும் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இணையம் வாயிலாக சந்தைப்படுத்தவும், வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இதற்கு அடிப்படைத் தேவை, கிடங்குகளும், குளிர்பதன சேமிப்பு வசதிகளும் தான்.

லாட்டரிச் சீட்டில் பரிசு

இத்தனை ஆண்டுகளில், இத்தகைய வசதிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம்? குளிர் பதனச் சேமிப்பில் இடம் கிடைப்பது என்பது, லாட்டரிச் சீட்டில் பரிசு விழுவதற்கு ஒப்பானது. ஒவ்வொரு கிராமத்தை ஒட்டியும், இத்தகைய சேமிப்பு வசதிகளை உருவாக்கியிருக்க வேண்டாமா?

கூடுதல் உற்பத்தி, ஒரு வரம் தானே!

ஆனால், பல சமயங்களில், காய்கறிகளையும், பழங்களையும் விவசாயிகள் சாலையில் கொட்டும் செய்திகளைப் பார்க்கிறோம்.என்ன பிரச்னை?கறந்த பாலைக் கொட்டுவதை அறிந்து கொள்கிறோம். என்ன பிரச்னை? கூடுதல் உற்பத்தியை, வேறு பொருட்களாக மாற்றும் வசதிகளும் திட்டங்களும் இங்கே இல்லை. எவ்வளவு, ‘வேஸ்ட்...’

நெஞ்சே பதறுகிறதே!

இதற்கு மேல் கடனும், உரிய விலையும் இன்னும் பிரச்னைகள். அதாவது, அரசாங்கங்கள் இத்தனை ஆண்டுகளாக கொண்டுள்ள அணுகுமுறை ஒரு சார்பானது. வாடிக்கையாளர் களை மனதில் வைத்து, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.உற்பத்தியாளர்களான விவசாயிகள் முக்கியமில்லை. எல்லாமே சந்தை தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறை நிச்சயம் சரியானது தான்.

மிகப்பெரிய பாதிப்பு

ஆனால், அதற்குச் சந்தைப்படுத்துதலின் அத்தனை சாத்தியங்களும் விவசாயிக்கு கிடைத்திருக்குமானால், அவர்களால் உரிய விலையை பெற்றிருக்க முடியும். நடுவே, அரசாங்கங்கள் சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய, யாருக்குமே எந்த லாபமும் இல்லை. வாடிக்கையாளரும் பயன் பெறவில்லை.உண்மையில், நாம் வேறு இடத்தில் இருந்து துவங்கியிருக்க வேண்டும்.

தொழிற்துறையும் சேவைத் துறையுமே சோறு போடப் போகிறது என்ற கற்பனை இன்று தவிடுபொடியாகியுள்ளது. பரவாயில்லை.ஆனால், இவற்றுக்கு இணையாக வேளாண்மை யையும் நாம் கருத்தில் கொண்டு மேம்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அங்கே விட்ட கோட்டை தான், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த ஜி.டி.பி.,யில் வேளாண்மையின் பங்களிப்பு வெறும், 4 சதவீதம் தான் என்று பேசி, அதன் மகத்துவத்தை ஒழித்து விட்டார்கள்.நிலம் சோறு போடாதுஅங்கே உழைப்பாளிகள் அதிகம், அவர்கள் வைத்துள்ள நிலமோ மிகக் குறைவு. அதனால், அனைத்து விவசாயி களுக்கும் நிலம் சோறு போடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். மன்மோகன் சிங் உட்பட பல மூத்த பொருளாதார அறிஞர்கள், விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. அடுத்த தலைமுறை விவசாயிகள் வேறு தொழில்களுக்குப் போவதே மேல் என்று பேசினர்.

நானே கூட, இக்கருத்து உண்மை தானோ என்று நம்பிய அபத்தம் நிகழ்ந்தது. ஆனால், இந்தச் சிந்தனைக்கு முற்றிலும் வேறு கோணத்தில் இருந்து அணுகியிருக்க வேண்டும் என்ற உண்மையை, கொரோனா சொல்லிக் கொடுத்துள்ளது.

புற்றீசல்

புற்றீசல் போன்று இன்ஜினியரிங் கல்லுாரி துவங்கியதற்குப் பதில், விவசாயக் கல்லுாரிகள் துவங்கியிருக்க வேண்டும். பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர் போன்று விவசாய ஆசிரியர் ஒருகாலத்தில் இருந்தார். அவர் ஒரு கட்டத்தில், காணாமலே போய்விட்டார். விவசாயப் பொருட்களைப் பதனிடுதலில் நவீனத்துவம், அதற்கான தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், கருவிகள் என்று முற்றிலும் நம் சொந்தப் பலத்தில் காலுான்றி நாம் நின்றிருக்க முடியும். நம் பலத்தையே பலவீனமாகக் கருதியதில் தான், பிரச்னையே துவங்கியது.வாக்கு வங்கிவிவசாயிகளை வாக்கு வங்கியாக கருதியதே பிரச்னை. அவர்களை ஆற்றலுடையவர்களாக மாற்றியிருக்க வேண்டும். மாறாக, அவர்களைக் கடன்காரர்களாகப் பார்த்தோம். கடன் தள்ளுபடி செய்தே, அவர்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சித்தோம்.

தன்னிறைவை வழங்கவேண்டியவர்களை, கையேந்திகளாக மாற்றினோம்.இன்று கொரோனா நம் கவனத்தை நேர் செய்துள்ளது. அட்சய பாத்திரம்எது அடிப்படையான துறை, நீடித்து நிலைக்கும் துறை, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வாரிக் கொடுக்கக் கூடிய துறை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. தானே உண்மையான, ‘அன்னை’ என்பதை, நிலமகள் உணர்த்துகிறாள்.

இனியாவது நம் முன்னுரிமைகள் மாற வேண்டும். ‘வரப்புயர...’ என்று வாழ்த்திய அவ்வை சொல்லில் பொருளுண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.-

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com
9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)