பதிவு செய்த நாள்
17 ஜூலை2020
23:16

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அண்மைக் காலமாக, அதன், டீல்கள் அனைத்தையும் வேகவேகமாக நிறைவேற்றி வந்தாலும், ஒரே ஒரு டீல் மட்டும் இன்னும் முன்னேற்றம் காணாமல் இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தன் எண்ணெய்-- - ரசாயன வணிகத்தில், ஐந்தில் ஒரு பகுதியை, சவுதி அராம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும், இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு, ரிலையன்ஸ் எண்ணெய் - ரசாயன வணிகத்தின் மதிப்பீட்டில், 20 சதவீதத்தை குறைக்கும்படி, சவுதி அராம்கோ கேட்டு வருவதான் காரணம் என்கிறார்கள், இவ்விவகாரம் அறிந்தவர்கள்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிலையன்ஸ் நிறுவனம், அதன் எண்ணெய்_ ரசாயன வணிகத்தில், 20 சதவீத பங்குகளை வழங்குவதற்கு, 15 பில்லியன் அமெரிக்க டாலர் தர வேண்டும் என, சவுதி அராம்கோவிடம் தெரிவித்திருந்தது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயில், 1.13 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, தேவைகள் குறைந்து, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த நிலையில், சவுதி அராம்கோ மறு மதிப்பீட்டை கோரி வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின், 20 சதவீத பங்குகளுக்கு, 11 - 12 பில்லியன் டாலர் என்ற அளவிலான விலைதான் சரியாக இருக்கும் என அராம்கோ கருதுகிறது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயில் கிட்தட்ட, 83,000 - 90,500 கோடி ரூபாய் ஆகிறது.இது தான், டீல் முடியாமல் தாமதமாகி வருவதற்கு காரணம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின், 43வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, சவுதி அராம்கோவுடனான டீல் தாமதமாகி வருவதற்கு காரணம், கொரோனா பாதிப்பு மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத சூழ்நிலைகள் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|