ஸ்மார்ட் போன் சந்தை  48 சதவீதம் சரிவு ஸ்மார்ட் போன் சந்தை 48 சதவீதம் சரிவு ...  தங்கத்தில் முதலீடு செய்ய  தங்கத்தில் முதலீடு செய்ய ...
பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2020
12:26

பேர் அண்ட் லவ்லி அழகு சாதன பொருளை தொடர்ந்து பாத்திரம் கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்காட்ச் -பிரைட் பிராண்டின் இலச்சினையில் பெண்ணின் உருவம் இடம் பெற்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக, பிரபல நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகள் வாயிலாக நிறம் மற்றும் பாலியல் பேதங்களை எவ்வாறு பரப்புகிறார்கள் என்பது குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றி வரும் கார்த்திக் சீனிவாசன் என்பவர் லிங்க்டு இன் தளத்தில், பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் ஸ்காட்ச்- பிரைட்டை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

தனது நீண்ட பதிவில் , ஸ்க்ரப் பேட், விளக்குமாறு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் பிரஷ் போன்ற தயாரிப்புகளில் ஒரு பெண்ணை தங்கள் சின்னமாக பயன்படுத்துவது குறித்தும் ஆச்சர்யமடைந்ததாகவும், மேலும் லிண்ட் ரோலர் போன்ற தயாரிப்புகளில் பெண்ணின் உருவம் குறிப்பிடப்படவில்லை .

1990ம் ஆண்டு இந்தியாவில் 3 எம் தயாரிப்பு நிறுவனம் ஸ்காட் பிரைட்டை அறிமுகப்படுத்திய போது, பயனர் அடிப்படையில் விளம்பர நிறுவனம் அதுபோன்று குறிப்பிட்டிருக்கலாம். அதற்கு பின் அவர்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால் 2020ம் ஆண்டில், பாலின அடிப்படையில் குறிப்பிடுவது அருவருக்கத்தக்க மற்றும் வெளியேற வேண்டிய ஒன்று என சுட்டிகாட்டினார். குறிப்பிட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள், இதனை உணர்ந்து தங்களது இலச்சினையை மாற்றுவார்கள் என எண்ணுவதாக கூறியிருந்தார்.

கார்த்திக் சீனிவாசனின் பதிவு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்ததோடு, இணையத்தில் பலரும் 3 எம் நிறுவனத்திற்கு, சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து கார்த்திக்கு பதிலளிக்கும் விதமாக, 3 எம் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் நிர்வாகி அதுல் மாத்தூர் , ’புத்திசாலித்தனமான கருத்துக்களுக்கு நன்றி .

பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளிலிருந்து முன்னேற வேண்டிய நேரம் இது’, ’பிராண்டிங் இலச்சினையை மாற்றுவது தொடர்பாக பணியாற்றி வருவதாகவும், விரைவில் மக்கள் இலச்சினையில் மாற்றத்தைக் காண முடியும்’ என்றும் உறுதியளித்தார். மேலும் மனிதர்களின் நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்க அவர்கள் முயற்சிக்கும் முறையை பற்றி பேசும், கர் சப்கா, தோ காம் பீ சபி கா' என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்திற்கான வீடியோ இணைப்பையும் அதனுடன் பகிர்ந்திருந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)