பதிவு செய்த நாள்
22 ஜூலை2020
23:40

புதுடில்லி,:பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிகர லாபம், முதல் காலாண்டில், 60.92 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 395.51 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1,012.17 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனத்தின் வருவாய், கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 7,756 கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால், இந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வருவாய், 60.29 சதவீதம் சரிந்து, 3,079 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இந்நிறுவனம், மதிப்பீட்டு காலாண்டில், 4.43 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனை, 12.47 லட்சம் வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் காரணமாக, முதல் காலாண்டு மிகவும் சவாலாக இருந்ததாக நிறுவனம், அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|