'வால்மார்ட் இந்தியா'வை கையகப்படுத்தியது, 'பிளிப்கார்ட்' 'வால்மார்ட் இந்தியா'வை கையகப்படுத்தியது, 'பிளிப்கார்ட்' ...  தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி.,  சி.ஐ.ஐ., தலைவர் தகவல் தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி., சி.ஐ.ஐ., தலைவர் தகவல் ...
அமெரிக்காவில் வேலை குறைகிறது ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2020
23:12

புதுடில்லி:இந்தியர்களிடையே, அமெரிக்காவில் வேலை தேடும் ஆர்வம் மெதுவாக குறைந்து வருவது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களிடையே, அமெரிக்கா குறித்த ஆர்வம் முன்னிலை வகித்தாலும், அது மெதுவாக குறைந்து வருவதாக, உலகளவிலான பணி தேடல்களுக்கு உதவும் இணையதளமான, ‘இண்டீடு’ தெரிவித்துள்ளது.இது குறித்து இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜூனில், 58 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூனில், 42 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை கண்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களின் முதன்மை தேர்வாக, அமெரிக்காவே இருக்கிறது.இந்த சரிவுக்கு, கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் தெளிவற்ற நிலை, அமெரிக்க குடியுரிமை குறித்த விஷயங்களில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.இதே காலகட்டத்தில் கனடா, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கத்தார் ஆகிய நாடுகள் குறித்த தேடல், இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் வேலை தேடும், 10 இந்தியர்களில், ஒன்பது பேர் தொழில்நுட்ப துறையில் வேலை தேடுபவர்களாக இருக்கின்றனர்.இந்தியாவைப் பொறுத்தவரை, அது ஒரு தனித்துவம் வாய்ந்த சந்தையாகும்.இங்கு, இளம் தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றவும் தயாராக இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி; இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டு உள்ள நாடாகும்.இவ்வாறு, இண்டீடு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)