அன்னிய செலாவணி இருப்பு: தங்கத்தின் மதிப்பால் உயர்வுஅன்னிய செலாவணி இருப்பு: தங்கத்தின் மதிப்பால் உயர்வு ... மீட்சிக்கு திரும்பும் வாகன விற்பனை ஜூலை மாத நிலவரம் என்ன? மீட்சிக்கு திரும்பும் வாகன விற்பனை ஜூலை மாத நிலவரம் என்ன? ...
பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
13:55

புது­டில்லி: கடந்த ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், நாட்­டின் பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் விற்­பனை, 30 சத­வீ­தம் அள­வுக்கு சரி­வைக் கண்­டுள்­ளது.

கொரோனா தொற்று பர­வல் கார­ண­மாக வினி­யோ­கத்­தில் ஏற்­பட்ட சிக்­கல்­க­ளால், நாட்­டின் பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் விற்­பனை, முதல் காலாண்­டில், 30 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­துள்­ள­தாக, கவுன்­டர்­பா­யின்ட் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­து உள்­ளது.ரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் பிரிவு என்­பது, 30 ஆயி­ரம் ரூபாய்க்கு அதி­க­மான விலை கொண்ட ஸ்மார்ட்­போன்­க­ளின் பிரி­வா­கும்.

இது குறித்து, ஆய்­வ­றிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:நாடு முடக்­கப்­பட்­டதை தொடர்ந்து, கடந்த ஏப்­ரல் மாதத்­தில், விற்­பனை கிட்­டத்­தட்ட பூஜ்­ஜி­யம் என்ற நிலைக்கு வந்­த­தால், முதல் காலாண்­டில் இத்­த­கைய சரிவை சந்­திக்க நேர்ந்­துள்­ளது.இருப்­பி­னும் கூட, பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் துறை மிக­வும் குறை­வான பாதிப்­பையே சந்­தித்­துள்­ளது. ஆப்­பிள் மற்­றும் ஒன்­பி­ளஸ் நிறு­வ­னங்­க­ளின் அறி­மு­கங்­கள், இந்த சந்­தையை உயி­ரோட்­ட­மாக வைத்­துக் கொள்ள உதவி செய்­துள்­ளன.

அது­மட்­டு­மின்றி, விற்­ப­னை­யா­ளர்­கள் அல்ட்ரா பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் சந்­தை­யில் அதிக கவ­னத்தை செலுத்தி இருக்­கி­றார்­கள்.இதற்கு முக்­கிய கார­ணம், நல்ல லாபம் மற்­றும் பிராண்­டு­களை அதி­க­ரித்­துக்­கொள்­வது ஆகி­ய­வையே.ஒன்­பி­ளஸ் நிறு­வ­னம், பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன் சந்­தை­யில் தொடர்ந்து முத­லி­டத்தை தக்க வைத்­துக் கொண்­டி­ருக்­கிறது. இந்த பிரி­வில் இந்­நி­று­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பு, 29 சத­வீ­த­மா­கும்.

ஒன்­பி­ளஸ் நிறு­வ­னத்தை தொடர்ந்து, சாம்­சங் இரண்­டா­வது இடத்­தி­லும், ஆப்­பிள் மூன்­றா­வது இடத்­தி­லும் உள்­ளது.தற்­போது, 5ஜி தொழில்­நுட்­பம் அறி­மு­கம் ஆகும் நிலை­யில், அத்­த­கைய போன்­கள் அல்ட்ரா பிரீ­மி­யம் ஸ்மார்ட்­போன்­க­ளாக கரு­தப்­ப­டு­கின்றன.சயோமி, ஒப்போ, விவோ ஆகிய நிறு­வ­னங்­கள் இந்த பிரி­வி­லும் நுழைந்­துள்­ளன.இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் சவரன் ரூ.2,248 சரிந்த நிலையில் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நுகர்பொருட்கள் விற்பனை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
திருப்பூர்:சீனாவின் ஜவுளி ஏற்றுமதி, சரிவை சந்தித்துள்ள நிலையில், நம் நாட்டு ஜவுளித் துறையினர், புதிய ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் எரிபொருள் தேவை, 11.7 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இருப்பினும், ... மேலும்
business news
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)