ஏற்றுமதி ‘ஆர்டர்’கள் அதிகரித்தாலும் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது ஏற்றுமதி ‘ஆர்டர்’கள் அதிகரித்தாலும் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது ...  அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலையில் அதிக முதலீடு அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலையில் அதிக முதலீடு ...
‘யுனிகார்ன் ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
23:35

மும்பை:இந்தியாவில் மொத்தம், 21 ‘யுனிகார்ன்’ ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஒரு பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 7,500 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட நிறுவனங்கள், ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் என அழைக்கப்படும்.

இத்தகைய அதிக மதிப்பு கொண்ட, 21 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாக, ஹுருன் குளோபல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* இந்தியாவில் மொத்தம், 21 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. மேலும், இது போன்ற, 40 நிறுவனங்களை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் துவக்கி இருக்கின்றனர்

* இந்த, 21 நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 73.2 பில்லியன் டாலர் அதாவது, 5.49 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

* யுனிகார்ன் நிறுவனங்கள் அதிகமிருக்கும் நாடுகளில், இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில், இந்தியா இருக்கிறது

* உலகளவில் மொத்தம், 586 யுனிகார்ன் நிறுவனங்கள், 29 நாடுகளில் உள்ள, 145 நகரங்களில் அமைந்துள்ளன

*இந்தியர்கள் துவக்கி இருக்கும், 61 யுனிகார்ன் நிறுவனங்களில், மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் உள்ளன. அதிலும் அதிகமாக, அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளன

* வெளிநாடுகளில் இந்தியர்களால் துவக்கப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 7.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில், பின்டெக் ராபின்ஹூட் நிறுவனம், 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் முன்னிலை வகிக்கிறது

* இந்தியாவிலுள்ள, 21 நிறுவனங்களில், பேடிஎம், ஓயோ ரூம்ஸ், பைஜுஸ், ஓலா கேப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள், மின்னணு வர்த்தக துறையில் இயங்குகின்றன

* இந்தியாவில் அதிகபட்சமாக, பெங்களூருவில் மொத்தம், 8 நிறுவனங்கள் உள்ளன. யுனிகார்ன் மையமாக பெங்களூரு விளங்குகிறது

* ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்தை அடைய, அமெரிக்காவில், 6.5 ஆண்டுகளும்; சீனாவில், 5.5 ஆண்டுகளும் ஆகின்றன. இதுவே,இந்தியாவில், 7 ஆண்டுகள் ஆகின்றன

* சீனாவில் உள்ள யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இந்தியாவில், பத்தில் ஒரு பங்கு தான் உள்ளது. சீனாவில் மொத்தம், 227 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன
* இந்தியர்கள் வெளிநாடுகளில், 40 நிறுவனங்களை துவக்கி இருக்கும் நிலையில், சீனா, அந்நாட்டுக்கு வெளியே, 16 நிறுவனங்களை மட்டுமே துவக்கி இருக்கிறது
* இந்தியாவில் உள்ள, 11 யுனிகார்ன் நிறுவனங்களில், சீனாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள், அதிக முதலீடுகளை செய்துள்ளன

* சீனாவை சேர்ந்த அலிபாபா, 5 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும்; டென்சென்ட், 3 நிறுவனங்களிலும்; டி.எஸ்.டி., குளோபல், 3 நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளன

* ஜப்பானை சேர்ந்த, சாப்ட்பேங்க், 9 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த, டைகர் குளோபல், 5 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது

* டில்லி ஐ.ஐ.டி.,யில் இருந்து, அதிகளவிலான யுனிகார்ன் நிறுவனர்கள் உருவாகி இருக்கின்றனர். மொத்தம், 36 நிறுவனர்கள், டில்லி ஐ.ஐ.டி.,யிலிருந்து வந்தவர்கள் ஆவர்

* இந்திய யுனிகார்ன் நிறுவனர்களில், 104 பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை வெறும், 5 மட்டுமே.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 ... மேலும்
business news
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)