பதிவு செய்த நாள்
08 ஆக2020
23:02

மும்பை:நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல தரவுகள், கொரோனா தாக்கத்தால் சரிவை காட்டி வந்தாலும், அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.கடந்த, 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 1,194 கோடி டாலர், அதாவது, 89 ஆயிரத்து, 550 கோடி ரூபாய் உயர்ந்து, 53 ஆயிரத்து, 457 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது, தற்போதைய இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 40.09 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதையடுத்து, அன்னிய செலாவணி இருப்பு புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்து உள்ளது.
கடந்த வியாழன் அன்று, நிதி கொள்கை குழு கூட்டதின் முடிவுகளை அறிவித்த, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தற்போது இருப்பில் உள்ள அன்னிய செலாவணி மதிப்பு, 13.4 மாத இறக்குமதிக்கு சமமாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில் ஜூலை, 31ம் தேதிவரையிலான காலகட்டத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 5,680 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
அன்னிய பண மதிப்பு அதிகரிப்பு
இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், இருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 11 ஆயிரத்து, 475 கோடி ரூபாய் அதிகரித்து, 2.82 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு, 1,035 கோடி டாலர் அதிகரித்து, 36 ஆயிரத்து, 812 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|