பதிவு செய்த நாள்
08 ஆக2020
23:52

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், வணிக நம்பிக்கை குறியீடு, 40 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக, தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்திய தொழில் துறையை சார்ந்தவர்களின் வணிக உணர்வின் குறிகாட்டியான,‘வணிக நம்பிக்கை குறியீடு’ நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 46.4 சதவீத புள்ளியாக உள்ளது. இது முந்தைய காலாண்டில், 77.4 சதவீத புள்ளியாக இருந்தநிலையில், தற்போது, 40.1 சதவீதம் குறைந்து, 46.4 ஆக உள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 62 சதவீத சரிவாகும்.
ஆராய்ச்சி கவுன்சில் இதுவரை, 113 ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், இதுதான் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைவாகும்.தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், கிட்டத்தட்ட, 600 இந்திய நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, இந்த முடிவுகளை அறிவித்துள்ளது.நாட்டின் நான்கு பகுதிகளின் நிலை குறித்து, ஆறு நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு பகுதி நிலை குறித்து டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்திலும்; மேற்கு குறித்து மும்பை, புனே நகரங்களிலும்; கிழக்கு குறித்து கோல்கட்டாவிலும்; தெற்கு குறித்து சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் இந்த வணிக நம்பிக்கை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த, 1991ம் ஆண்டு முதல் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த ஜூன் மாத காலாண்டு குறித்த ஆய்வின் போது, அடுத்த ஆறு மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை உயர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் இருந்த நம்பிக்கையில், 9 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு இறுதி காலாண்டில், 26.1 சதவீதமாக இருந்தது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 17.1 சதவீதமாக குறைந்திருப்பதை அறிய முடிந்தது.
நிறுவனங்களின் நிதி நிலைமை, அடுத்த ஆறு மாதங்களில் முன்னேறுமா என்பது குறித்த ஆய்வில், 7.7 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும், முக்கியமான 5 துறைகளில் வணிக நம்பிக்கை குறித்து எடுக்கப்பட்ட ஆய்விலும், அனைத்து துறைகளிலும் வணிக நம்பிக்கை குறைந்திருப்பதை அறிய முடிந்தது.மேலும், வணிக நம்பிக்கை குறியீட்டில் தனியார் நிறுவனங்களில், 34.8 சதவீதமும் பொதுத்துறையில், 47.4 சதவீதமும் வீழ்ச்சியை காண முடிந்தது.
அரசியல் நம்பிக்கை குறியீட்டை பொறுத்தவரை, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், 73.7 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 63.1 சதவீதமாக சரிந்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது, 50.1 சதவீத வீழ்ச்சியாகும்.,இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|