பதிவு செய்த நாள்
09 ஆக2020
13:29

சமீபத்தில், சீனாவை சேர்ந்த, 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். தடை செய்யப்பட்ட போதே, மத்திய அரசு, ‘இந்திய ஸ்டார்ட் அப்’களை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய செயலிகளை உருவாக்குங்கள் என, அழைப்பு விடுத்தது.
இதையேற்று, பலர் பல செயலிகளை உருவாக்க துவங்கினர். இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகள் கண்டுபிடித்த சில சிறந்த செயலிகளையும், அவை எந்த விதத்தில், சீன செயலிகளுக்கு மாற்றாக இருக்கும், அதை உபயோகப்படுத்துவதால் என்ன நன்மை என்பதை பற்றியும் பார்ப்போம்.
டுடோ டிராப் (Dodo Drop) ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு, அல்லது ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு, பெரிய பைல்களை அனுப்ப, ‘டுடோ டிராப்’ என்ற செயலியை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சவுத்ரி கண்டுபிடித்துள்ளார். இதனால், பெரிய வீடியோ பைல், ஆடியோ பைல், இமேஜஸ், டெக்ஸ்ட் ஆகியவற்றை, மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் இருந்து இன்னொருவருக்கு எளிதாகவும், விரைவாகவும் அனுப்பும் வசதியை தருகிறது.
அம்பிலிஜீன் இந்தியா (Ampligene India)குஜராத்தை சேர்ந்த ‘அம்பிலிஜீன் இந்தியா’ என்ற கம்பெனி, டாக்டர் சிராக் பாண்டியா என்பவரால் துவங்கப்பட்டது. கொரோனா வைரஸ் கண்டுபிடிக்க, ஒரு புதுமையான என்சைம் உபயோகப்படுகிறது. இதனால், சாதாரணமாக பி.சி.ஆர்., வழியாக செய்யப்படும் டெஸ்டில், 25 சாம்பிள் மட்டுமே டெஸ்ட் செய்யப்படும் வசதி இருக்கும் போது, இவர்களின் டெஸ்ட் கிட்டின் மூலம், 150 சாம்பிள் ஒரே நேரத்தில் டெஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது. www.ampligeneindia.com.
மை ரிசொனேட் (myresonate.com)கொரோனா வந்தாலும் வந்தது, ‘ஒர்க் பிரம் ேஹாம்’ என்பது அதிகரித்து விட்டது. ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்யும் போது பல பிரச்னைகள். இதில் முக்கியமானது மின்தடை, நெட்வொர்க் பிரச்னை போன்றவை. மின்சாரம் அடிக்கடி தடைபடுதல் பிரச்னையை சமாளிக்க, சுதிர் சத்தியமூர்த்தி என்பவரின், ‘மை ரிசொனெட்’ என்ற கம்பெனி, அதிக எடை இல்லாத, எளிதில் நிறுவக்கூடிய ஒரு ‘ரவுட்டர் யுபிஎஸ்’ கண்டுபிடித்துள்ளார்.இதை பொருத்தி விட்டால், ‘விபிஎன், வெபெக்ஸ், ஜூம்’ உட்பட நீங்கள் உபயோகிக்கும் ஆன்லைன் டூல்ஸ், மின்சாரம் நின்று போவதால் தடைபடாமல் செயல்பட உதவுகிறது. பல நிறுவனங்கள் இவர்களிடமிருந்து ரவுட்டர்களை வாங்கி, தங்களது அலுவலக ஊழியர்களுக்கு கொடுத்துள்ளனர். www.myresonate.com.எனவே, இந்திய செயலிகளை அதிகம் உபயோகப்படுத்த வேண்டும். அது தான் நாடும் எதிர்பார்க்கிறது. அது, இந்திய ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளை ஊக்குவிக்கும். அப்போது மட்டுமே, பிரதமரின் ‘தற்சார்பு கனவு’ நனவாகும்.
-– சேதுராமன் சாத்தப்பன் –
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com,
www.startup businessnews.com.
மொபைல் போன்: 98204 51259.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|