தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்ததுதங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது ...  ஏற்றுமதி இலக்கை அதிகரிக்கணும் தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை ஏற்றுமதி இலக்கை அதிகரிக்கணும் தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை ...
பார்ச்சூன் இடம் பிடித்த இந்திய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
22:34

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ், உலகளாவிய முதல், 100 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. உலகளவிலான நிறுவனங்களை, அவற்றின் மொத்த வருவாயின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது., பார்ச்சூன் இதழ்.


இதன் உலகளாவிய, 500 நிறுவனங்கள் பட்டிய லில், முதல், 100 இடங்களில் ஒன்றாக, இடம்பிடித்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனம், 96வது இடத்தை பிடித்துள்ளது.இதன் மூலம் பார்ச்சூன், 500 பட்டியலில் இந்த இடத்தை பிடித்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் ரிலையன்ஸ் பெற்றுள்ளது.

கடந்த, 2012ம் ஆண்டில் ஒருமுறை, முதல், 100 இடங்களில் ரிலையன்ஸ், 99வது இடத்தை பிடித்தது. ஆனால், அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த இடத்தை இழந்து, பின்னுக்கு சென்றது. கடந்த, 2016ம் ஆண்டில், ரிலையன்ஸ், 215வது இடத்துக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அதன்பின் தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டது. தற்போது, 10 இடங்கள் முன்னேறி, 96 இடத்தை பிடித்துள்ளது.

பொதுத் துறை நிறுவன மான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 34 இடங்கள் சரிவு கண்டு, 151வது இடத்துக்கு வந்துள்ளது. இதேபோல் ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 30 இடங்களை இழந்து, 190 இடத்தை பிடித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., 15 இடங்கள் முன்னேறி, 221 இடத்தை பிடித்துள்ளது.பாரத் பெட்ரோலியம், 309 இடத்தையும்; டாடா மோட்டார்ஸ், 337 இடத்தையும்; ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், 462 இடத்தையும் பிடித்துள்ளன.

முதலிடத்தை வால்மார்ட் பிடித்துள்ளது. இதனையடுத்த மூன்று இடங்களை, சீன நிறுவனங்களான, சினோபெக் குழுமம், ஸ்டேட் கிரிட், சீனா நேஷனல் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன. ராயல் டச் ஷெல் ஐந்தாம் இடத்தையும்; சவுதி அராம்கோ ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)