வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  டிக் டாக் வணிகத்தை வாங்க  ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி டிக் டாக் வணிகத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி ...
சில்லரை விலை பணவீக்கம் ஜூலையில் 6.93 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
12:35

புதுடில்லி: நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில், 6.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இது ஜூன் மாதத்தில், 6.23 சதவீதமாக இருந்தது.இது குறித்து, மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பணவீக்க விகிதத்தின் அடிப்படையில், கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம், 6.09 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது, தற்போது, 6.23 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த உணவு விலை பணவீக்கம், ஜூனில், 8.72 சதவீதமாக இருந்தது; ஜூலையில், 9.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.காய்கறிகள் பணவீக்கம் ஜூன் மாதம், 1.86 சதவீதமாக இருந்தது; ஜூலையில், 11.29 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகிய பிரிவில் பணவீக்கம், 2.80 சதவீதமாக உள்ளது. இது ஜூனில், 2.69 சதவீதமாக இருந்தது.


மதிப்பீட்டு மாதத்தில், இறைச்சி மற்றும் மீன்கள் பிரிவிலும் பணவீக்கம் அதிகரித்து, 18.81 சதவீதமாக உள்ளது.பருப்பு மற்றும் தயாரிப்புகளில் பணவீக்கம், 15.92 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜூனில், 16.68 சதவீதமாக அதிகரித்திருந்தது.கடந்த இரண்டு காலாண்டுகளில், சராசரி சில்லரை விலை பணவீக்கம், 6 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சில்லரை விலை பணவீக்க தரவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)