மெதுவான மீட்சிக்கு திரும்பும்  உள்நாட்டு விமான போக்குவரத்து மெதுவான மீட்சிக்கு திரும்பும் உள்நாட்டு விமான போக்குவரத்து ... சுற்றுலா பயணத்தை தீர்மானிக்க உதவும் கேள்விகள் சுற்றுலா பயணத்தை தீர்மானிக்க உதவும் கேள்விகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் தவணை சலுகை வசதியால் புதிய சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2020
22:58

கடன் தவணையை தள்ளிவைக்கும் சலுகை வசதியை நாடியவர்கள், வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்வதில் புதிய சிக்கல் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா முடக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், கடனுக்கான மாதத் தவணை செலுத்துவதை தள்ளிவைக்கும் சலுகையை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு இது உதவும் என்றாலும், இந்த சலுகையை நாடுவதால், கடன் சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது பற்றி பேசப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடன் தவணை தள்ளிவைப்பை நாடியவர்கள், குறைவான வட்டி விகித பலனை பெற வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால், அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தள்ளிவைப்பு சலுகையை நாடியவர்கள், நிதி நெருக்கடியில் இருப்பதாக கருதப்படலாம் என்பதே இதற்கு காரணம்.

இந்த நிலையை தவிர்க்க, வீட்டுக்கடனை மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள், கடன் தவணை சலுகை காலம் முடிந்த பின், சில மாதங்கள் முறையாக தவணை செலுத்திவிட்டு, வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 16,2020
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)