பதிவு செய்த நாள்
17 ஆக2020
11:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்தவாரத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(ஆக.,17) உயர்வுடனேயே துவங்கி உள்ளது.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.90 புள்ளிகள் உயர்ந்து 38,049.33ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 52.05 புள்ளிகள் உயர்ந்து 11,230.45ஆகவும் வர்த்தகமானது.
அமெரிக்கா – சீனா இடையே நிலவும் வர்த்தக பிரச்னையால் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவிய போதும் உள்நாட்டில் முதலீட்டாளர்கள் சில குறிப்பிட்ட பங்குககளை அதிகளவில் வாங்க தொடங்கியதாலும், என்டிபிசி., டாடா ஸ்டீல், எல்அண்ட்டி, கோட்டாக் வங்கி, ஐடி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக உயர்வு கண்டதாலும், இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கியதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காலை 11.20மணியளவில் சென்செக்ஸ் 50 புள்ளிகளும், நிப்டி 28புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.74.83ஆக வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.40 சதவீதம் உயர்ந்து 45.13 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|