பதிவு செய்த நாள்
17 ஆக2020
23:17

மும்பைகொரோனாவால், ஒட்டு மொத்த இந்தியாவில் தனிநபர் இழப்பு, 27 ஆயிரம் ரூபாயாகவும்; தமிழகத்தில், 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை கணித்து அறிவித்துள்ளது.
வளர்ச்சி
மேலும், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 16.5 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த மே மாதத்தில், எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையான, ஈகோவ்ராப், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 20 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, மைனஸ் 16.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ., அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இதுவரை, 1,000த்துக்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின், முதல் காலாண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அளவில்இவற்றில் முன்னணி நிறுவனங்களில் இழப்பு, 25 சதவீதத்துக்கு அதிகமாகவும், மற்றவற்றில், 55 சதவீதத்துக்கு அதிகமாகவும் இருப்பது தெரிய வந்து உள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 16.8 சதவீதமாக உள்ளது.மஹாராஷ்டிராவில் இது, 14.2 சதவீதமாகவும்; தமிழகத்தில், 9.2 சதவீதமாகவும்; உத்தர பிரதேசத்தில், 8.2 சதவீதமாகவும் உள்ளன.
மேலும், தனிநபர் இழப்பை பொறுத்தவரை, அகில இந்திய அளவில், 27 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் தமிழகம், குஜராத், தெலுங்கானா, டில்லி, ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களில், கொரோனாவால் தனிநபர் இழப்பு, 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|