பதிவு செய்த நாள்
18 ஆக2020
00:05

புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மின்னணு வர்த்தக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களான, ‘அர்பன்லேடர், மில்க்பாஸ்கெட்’ ஆகியவற்றை கையகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில் மின்னணு வர்த்தக பிரிவில் வலுவாக காலுான்ற முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்னணு வர்த்தக துறையைச் சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்களான, அர்பன்லேடர், மில்க்பாஸ்கெட் ஆகியவற்றை கையகப் படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
மரச் சாமான்களை விற்பனை செய்யும், அர்பன்லேடர் நிறுவனத்துடனான பேச்சு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக தெரிகிறது. இந்நிறுவனத்தை, 225 கோடி ரூபாயில் கையகப் படுத்தி விடும் என சொல்லப்படுகிறது. நிறுவனம் கைக்கு வந்த பின், அதன் வணிகத்தை மேலும் விஸ்தரிக்க, ரிலையன்ஸ் கூடுதல் முதலீட்டை மேற்கொள்ள இருக்கிறது. மில்க்பாஸ்கெட் ஏற்கனவே, ‘அமேசான் மற்றும் பிக்பாஸ்கெட்’ நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி இருக்கிறது.
இப்போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடனும் ஆரம்பகட்ட பேச்சை நடத்தி வருகிறது.இவை தவிர, மின்னணு மருந்தக நிறுவனமான, ‘நெட்மெட்ஸ்’ மற்றும் உள்ளாடைகளுக்கான நிறுவனமான, ‘ஜிவாமே’ ஆகியவற்றை கையகப்படுத்தும் முயற்சியிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கி உள்ளது குறிப் பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|