பதிவு செய்த நாள்
18 ஆக2020
00:10

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, உலகளாவிய ஆலோசனைக் குழுவான, அட்லான்டிக் கவுன்சிலின் சர்வதேச குழுவில், உறுப்பினராக சேர்க்கப்பட்டுஉள்ளார்.
இந்த குழுவில், நியூஸ் கார்ப் தலைவர் ரூபர்ட் முர்டாக், முன்னாள் ஸ்பானிஷ் பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னார், ஏர்பஸ் தலைமை செயல் அதிகாரி தாமஸ் எண்டர்ஸ், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.இது குறித்து, அட்லான்டிக் கவுன்சிலின் தலைவர் ஜான் என் ஹன்ட்ஸ்மேன் கூறியதாவது:
இந்தியாவின் சிறந்த வணிக தலைவர்களில் ஒருவரான, அனில் அம்பானியும் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.அட்லான்டிக் கவுன்சில் தெற்காசியாவில் குறிப்பாக, இந்தியாவில் நன்றாக வளர்ச்சி பெற்று வருகிறது. அங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, அனில் அம்பானியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அனில் அம்பானி, ‘‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ந்து வரும் இந்திய புவிசார் அரசியல் செல்வாக்கின், தெளிவான அங்கீகாரம் இது,” என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|